கிருஷ்ணகிரியில் அதிபயங்கரம்; பெட்ஷீட், தென்னை ஓலைகளால் சுற்றி 2 இளைஞர்கள் எரித்து கொலை? - 2 கோர உடல்கள் கண்டுபிடிப்பு...!
கிருஷ்ணகிரி அருகே சாலையோரத்தில் அரை கிலோ மீட்டர் இடைவெளியிலேயே 2 இளைஞர்களின் உடல்களை தீயிட்டு எரித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி அருகே அரை கிலோமீட்டர் இடைவேளையில் இருவர் எரிக்கப்பட்டு கொடூர கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிருஷ்ணகிரி அருகே சாலையோரத்தில் அரை கிலோமீட்டர் இடைவேளையில் இரண்டு உடல்கள் தீயிட்டு எரித்து கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரியில் இருந்து ராயக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள பூவத்தி பஞ்சாயத்திற்கு உட்பட்ட கொடுகூர் என்ற பகுதியில் சாலையோரத்தில் இன்று காலை இளைஞர் ஒருவரை, உடலில் பெட்ஷீட் உள்ளிட்டவற்றை சுற்றி எடுத்துக் கொண்டு வந்து பெட்ரோல் ஊற்றி தென்னை ஓலைகளை வைத்து எரித்து கொலை செய்துள்ளனர்.
அதேபோல் இந்த இளைஞர் எரிந்த சடலத்தில் அருகில் அரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வெப்பாலம்பட்டி பகுதியில் மேலும் ஒரு இளைஞரை இதே பாணியில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!
இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கருகிய நிலையில் சடலங்கள் கிடப்பதாக அளித்த தகவலின் பேரிரில் சம்பவ இடத்திற்கு சென்ற கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தீயில் கருகி உயிரிழந்தவர்கள் யார்?? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக கொலை செய்துள்ளனர், வேறு பகுதியில் கொலை செய்து அவர்களை கொண்டு வந்து இங்கு தீ வைத்து எரித்தனரா?? அல்லது வேறு ஏதேனும் காரணமா என தொடர்ந்து தாலுக்கா போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!