×
 
☰

தியேட்டரில் தவம் கிடக்கலாமா.? இளைஞர்கள் நிலை என்ன.? ஆதங்கத்தை வெளிப்படுத்திய கிருஷ்ணசாமி..!!

இளைஞர்களின் நிலை குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

புதிய தமிழகம் கட்சித் தலைவர் இளைஞர்களிடையே வளர்ந்து வரும் திரையரங்கு மோகத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார். கடமைகளை மறந்துவிட்டு காலையிலேயே கால் கடுக்க திரையரங்குகளில் இளைஞர்கள் தவம் கிடப்பது சரியல்ல என அவர் தெரிவித்தார். திரையரங்குகள் பொழுதுபோக்கிற்கான இடங்களாக இருக்கலாமே தவிர, பொழுதையே போக்கும் புகலிடங்களாக ஆகிவிடக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.

போட்டிகள் நிறைந்த இந்நவீன காலத்தில் பொழுதுபோக்கு என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் தினசரி வழக்கமாகவோ கடமையாகவோ கருத இயலாது என அவர் சுட்டிக்காட்டினார். வாரத்திற்கு ஒருநாள் அல்லது மாதத்திற்கு இருநாள் என்பது இயல்பானது. தொடர் வேலைக்குப்பின் ஓய்வு என்பதை மாற்றி, வேலை நாள் முழுவதையுமே பொழுதுபோக்குகின்ற வகையில் இன்றைய இளைஞர்கள் திரையரங்குகளை நிரப்பும் அபாயம் வளர்ந்து வரும் போக்கு நம் இளைஞர் சமுதாயத்திற்கு அழகல்ல என அவர் குறிப்பிட்டார்.

காலை எட்டு மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரையிலும் உழைத்த பிறகு, இரவு உணவை முடித்துவிட்டு, எட்டு மணி நேர உறக்கத்திற்குப் பிறகு அதிகாலையில் உற்சாகமாக எழுந்து பணியைத் துவங்கினால், அது கல்வியோ, தொழிலோ, வணிகமோ வளர்ந்து பெருகும் என அவர் விளக்கினார். ஆனால் திரைக்கவர்ச்சி மோகத்தில் கல்வி, குடும்பப் பொறுப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு, காலை எட்டு மணிக்கே திரையரங்குகளை நோக்கிப் படையெடுப்பது வளர்ந்து வரும் நம் பாரத தேசத்திற்குப் பேராபத்தானது என எச்சரித்தார்.

இதையும் படிங்க: வி.எஸ். பாபுவுக்கு என்ன ஆச்சு..? எதுக்கு இவ்ளோ கமுக்கம்..? கிருஷ்ணசாமி சரமாரி கேள்வி..!!

தமிழ்நாடு கடந்த அறுபது ஆண்டுகளாகத் திரைக்கவர்ச்சிக்கு ஆட்பட்ட அரசியலால் சூழப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். அதன் விளைவாக, அண்மையில் நடந்த தேர்தலில் எவ்வித அரசியல், சமூக, பொருளாதார சித்தாந்தமும் இல்லாமல், வெறும் திரைக்கவர்ச்சியால் மட்டுமே ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டுள்ளது. இது தொடருமானால் தமிழக இளைஞர் சமுதாயம் எண்ணிப் பார்க்காத பேரழிவைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.

 

இதையும் படிங்க: வங்கி ஊழியர்கள் போராட்டம்... நிதியமைச்சர் தலையிட வேண்டும்..! கிருஷ்ணசாமி வலியுறுத்தல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share