2026ல் கூட்டணி ஆட்சி உறுதி... அடித்துச் சொன்ன கிருஷ்ணசாமி... அதிர்ந்து போன அதிமுக...!
2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் புதிய தமிழகம் தெளிவாகவும், வலுவாகவும் உள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி செய்தியாளரை சந்தித்தார். அப்போது பேசிய அவர் : தமிழக அரசால் மகளிர் உரிமை தொகை வழங்கப்படுவதை முன் கூட்டியே 5000 ரூபாய் 1.31 கோடி மகளிர் கணக்குகளில் வைக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியது. அரசின் பணத்தை வாரி வழங்குவது குறித்தும், மகளிர் உரிமை திட்டத்திற்கான நிதி பட்டியல் பிரிவு மக்களை மேம்படுத்த SC சிறப்பு உட்கூறு திட்டத்தை பயன்படுத்தி இருக்கிறது என்பது குற்றச்சாட்டு. அப்படி இல்லை என்ற அறிக்கையை தமிழக அரசு கொடுத்து இருக்கின்றது. சில ஆதாரங்களை கொடுத்து இருக்கின்றேன். 2023 முதல் 26 வை சிறப்பு உட்கூறு நிதியில் இருந்துதான் மகளிர் உரிமை தொகை எடுக்கப்பட்டு இருப்பது தெரிய வருகின்றது.
16 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்த நிதியில் இருந்து மகளிர் உரிமை தொகைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி வேறு கவர்ச்சி திட்டங்களுக்கு கொடுக்க கூடாது என விதி இருக்கின்றது. கடந்த காலங்களில் கலைஞர் டி.விக்கும் , உலக தமிழ் செம்மொழி மாநாட்டிற்கும் இந்த பணம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பயன்படுத்துவது தவறானது. கண்டனத்திறகுரியது. மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இது குறித்து வெள்ளை அறிக்கை அரசு வெளியிட வேண்டும். இதுகுறித்து நீதிமன்றம் செல்லும் திட்டமில்லை. ஊடகங்கள் முன்பு வைக்கின்றேன். தமிழக அரசு கடமையில் இருந்து தவறி இருக்கின்றது.
தேர்தல் ஆணையத்தை கட்டாயம் அணுகுவோம். நீதிமன்றம் போக வேண்டிய சூழல் வந்தால் போவோம் என்றார். அடுத்த ஒரு வாரத்தில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பேன்.
தேர்தல் பேச்சு வார்த்தை நடந்து கொண்டு இருக்கின்றது. 2026 சட்டமன்ற தேர்தலில்
கூட்டணி ஆட்சி என்ற தீர்மானத்தில் புதிய தமிழகம் தெளிவாக,உறுதியாக,வலுவாக இருக்கின்றோம். கூட்டணி குறித்து பொறுத்திருந்து பாருங்கள் என்றார். மேலும் கூட்டணியை கோவையில் இருந்ததால் அறிவிப்பேன். தவெக கூட்டத்திறகு பிற்பகல் 12 மணிக்கு அனுமதி கொடுத்தது தவறு. 12 மணிக்கு கூட்டம் நடத்தினால் sun stroke வரும். ஒரு மருத்துவராக சொல்கின்றேன் என்றார்.
இதையும் படிங்க: திண்டிவனம் ராமதாஸ் இல்லம் அருகே போலீஸ் தடியடி: மயான கொள்ளை திருவிழாவில் பாமகவினர் மீது தாக்குதல்!
இதையும் படிங்க: பாஜக தெருமுனை பிரச்சாரம் பிப்.17 முதல் தொடக்கம்: அண்ணாமலை, எல்.முருகன் பங்கேற்பு!