"கஞ்சாவுக்கு ஓட்டம்... டாஸ்மாக்குக்கு மௌனமா? CM விஜயை கேள்விகளால் துளைத்த கிருஷ்ணசாமி..!!
டாஸ்மாக் மது ஒழிப்பை சுட்டிக்காட்டி புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தையொட்டி தமிழ்நாட்டில் 'ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்' என்ற முழக்கத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. சென்னை மெரினா உள்ளிட்ட இடங்களில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேரில் பங்கேற்று ஓட்டத்தில் ஈடுபட்டார். 30 நிமிடங்களில் 3 கிலோமீட்டர் தூரம் ஓடி மாரத்தானை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், "Sports-ஐ எடு, Drugs-ஐ விடு" என்ற வாசகத்தை எழுதி கையொப்பமிட்டார்.
போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிரான உறுதிமொழியையும் ஏற்றுக்கொண்டார். இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து நடைபெற்ற இந்த நிகழ்வு போதை ஒழிப்பு நோக்கில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை வரவேற்ற பலரும் முதல்வர் விஜய்யின் பங்களிப்பை பாராட்டினர்.
தமிழகத்தை போதை இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில் அரசு எடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது. முதல்வர் பதவியேற்றதிலிருந்தே போதைப்பொருள் தடுப்புப் படை அமைத்தல், சில TASMAC கடைகளை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த மாரத்தான் அவரது அரசின் விழிப்புணர்வு முயற்சியை வலுப்படுத்தியதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த நிகழ்வுக்கு பதிலடியாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: "குழந்தைகளை பலி கொடுக்கவா ஆட்சி"..? மௌனம் வேண்டாம் முதல்வரே..! கிருஷ்ணசாமி ஆதங்கம்..!!
"போதை மருந்துகளை ஒழிக்க ஓடிய ஓட்டம், கொடிய போதை 'மதுவை' மறைத்தது ஏன்?" என்று கேள்வி எழுப்பிய அவர், முதல்வர் விஜய்யின் முயற்சியை பாராட்டிய அதே வேளையில் அதன் வரம்புகளை சுட்டிக்காட்டினார். கஞ்சா, சில போதை மாத்திரைகள் போன்றவற்றை மட்டும் குறிவைப்பதற்கு பதிலாக, அரசே விற்பனை செய்யும் டாஸ்மாக் மதுபானங்களையும் ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒழிக்கப்பட வேண்டியது கஞ்சா மற்றும் சில போதை மாத்திரைகள் மட்டுமல்ல., ஆண்டுக்குப் பல லட்சம் கோடி ரூபாய்க்கு அரசே விற்பனை செய்து, வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் டாஸ்மாக் மதுபானமும்தான் என்பதை மறந்தது ஏனோ? என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: வேளாண் பல்கலை.யில் காலி பணியிடங்கள்..! சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் நடத்துங்க..! வேல்முருகன் வலியுறுத்தல்..!!