கூட்டணிக்காக சமரசமா....? கே.எஸ்.விஜயகுமாருக்கு மீண்டும் Welcome கொடுத்த EPS..!
கும்மிடிப்பூண்டி முன்னாள் எம்எல்ஏ கே. எஸ் விஜயகுமாரை மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவில் இணைத்து கொண்டுள்ளார்.
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டதால் அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ் விஜயகுமார் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். காரணம் அதிமுகவின் கொள்கையே இருமொழிக் கொள்கைதான். திமுக, அதிமுக உட்பட பல்வேறு கட்சிகளும் ஓரணியில் திரண்டு இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்.
அப்போது, மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்துப் போட்டதன் எதிரொலியாக, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இதையும் படிங்க: இபிஎஸ்-இன் அரசியல் அத்தியாயம் 2026ல் முடியப் போவது உறுதி.. அறுதியிட்டு கூறும் ஆர்.எஸ்.பாரதி..!
இருப்பினும், பாஜகவினர் அழுத்தம் கொடுத்து வற்புறுத்திக் கேட்டதால் கையெழுத்திட்டேன் என்றும், இது தொடர்பாக பொதுச் செயலாளரை சந்தித்து என் தரப்பு விளக்கத்தை அளிப்பேன் என்றும் முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்எல்ஏ கே. எஸ். விஜயகுமார் மீண்டும் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
தற்போது பாஜகவுடன் தேர்தலுக்கு கூட்டணி அமைத்துள்ள அதிமுக, இணைந்து செயல்படுவோம் என கூறியிருக்கிறது. இந்த நிலையில் பாஜகவின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட k.s விஜயகுமாரை மீண்டும் அதிமுகவில் சேர்த்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். இதன் மூலம் முன்னாள் எம்எல்ஏ கே எஸ் விஜயகுமார் அதிமுகவில் மீண்டும் அடிப்படை உறுப்பினராக மாறி உள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணியை பார்த்து இவ்ளோ பயமா..? முதல்வர் ஸ்டாலினை வறுத்தெடுத்த நயினார்!!