“சுட்டு பிடிங்க...” - உச்சக்கட்ட கொந்தளிப்பில் மக்கள்... தொகுதி முழுக்க எடுத்த அதிரடி முடிவு...!
சில சுற்றுலா பயணிகள் போராட்டக்காரர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு சில சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று வருகின்றனர்.
கூடலூரில் ஆட்கொல்லி புலியை பிடிக்க வலியுறுத்தி இன்று முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், தங்களது போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு போராட்ட குழுவினர் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளிடம் வேண்டுகோள் வைத்தனர். அதனை ஏற்றுக்கொண்டு ஒரு சில சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்களை திருப்பி சொந்த ஊர்களுக்கே சென்றனர் .
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி 4ம் கேட் பகுதியில் பாலகிருஷ்ணன் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் கூடலூர் பகுதியில் நாளுக்கு நாள் வான விலங்குகள் தாக்கி மனிதர்கள் பரிதாபமாக உயிரிழந்த வரும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நாலாம் நம்பர் பகுதியில் கடந்த 9ஆம் தேதி பாலகிருஷ்ணன் என்பவர் கிராமத்திற்கு தண்ணீர் திறப்பதற்காக சென்றுள்ளார் அப்பொழுது புலி அவரை தாக்கிக் கொன்றதில் சம்பவ இடத்திலேயே பலியானார் .அந்த புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதையும் படிங்க: நேபாளத்தின் அதிர்ச்சி மாற்றம்: பெருவெள்ளத்திற்கு முன்... பின்... செயற்கைக்கோள் படங்கள்!
இதனை அடுத்து வனத்துறையினர் மெத்தனப்போக்குடன் செயல்பட்டதால்
கடந்த 21ஆம் தேதி அதே பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் அவரது வீட்டின் அருகாமையில் இருக்கக்கூடிய காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது புலி அவரை தாக்கி இழுத்துச் சென்று உடல் பாகத்தை உட்கொண்டது இதனை அடுத்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மீண்டும் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அனைத்து அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்புகள் இந்த புலியை சுட்டு பிடிக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் மெத்தனம் காட்டி வருவதாகவும் கூறி இன்று முதல் 48 மணி நேரம் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
குறிப்பாக ஆட்டோக்கள் ,சுற்றுலா வாகன தனியார் பேருந்துகள் போன்றவை இயக்கப்படவில்லை தொடர்ந்து இப்பகுதி முழுவதும் நோட்ட
நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்
இதையும் படிங்க: தேர்தல் வழக்கில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு! சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முக்கிய மனு!