#BREAKING: கூடங்குளம் அணுமின் நிலைய ப்ளூ பிரிண்ட் லீக்…! இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் பேரதிர்ச்சி..!!
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் ரகசிய ஆவணங்கள் லீக் ஆகி இருப்பதாகவும் கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூடங்குளம் அணுமின் நிலையம் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் மின் உற்பத்தி நிலையமாகும். தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில், கூடங்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், இந்திய அணுமின் கழகத்தின் (NPCIL) நிர்வாகத்தில் இயங்கி வருகிறது. ரஷ்யாவின் உதவியுடன் கட்டப்பட்ட இது, நாட்டின் தென்கோடியில் அமைந்து, சுமார் 6,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறனை இறுதியில் வழங்கும் திட்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையம் இந்தியாவின் அணுசக்தி துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்த நிலையம் தமிழ்நாட்டின் மின் தேவையை பெருமளவு நிறைவேற்ற உதவுகிறது. மின்சாரம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. அணு உலைகள் நீர்-நீர் அடிப்படையில் குளிரூட்டப்படுவதால், கடல் நீர் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்கள் அதிநவீனமானவை எனக் கூறப்படுகிறது.
கூடங்குளம் திட்டம் இந்தியா-ரஷ்யா இடையிலான உறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. ரஷ்யா தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க, இந்தியா கட்டுமானம் மற்றும் செயல்பாட்டை மேற்கொள்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உள்கட்டமைப்பு தொடர்பான ரகசிய ஆவணங்கள் லீக் ஆகியிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திருச்செந்தூரில் நடக்கல..!! "வீ த லீடர்ஸ்"-ன் 2வது மாநாடு தற்காலிகமாக ரத்து..!!
ரகசிய ஆவணங்கள் டார்க் வெப்பில் கசிந்து உள்ளது. இந்திய பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரிலையன்ஸ் குடும்பத்திடமிருந்து திருடப்பட்டவை என குறிப்பிட்டு இணையத்தில் ரகசிய ஆவணங்கள் லீக் ஆகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் ரகசிய ஆவணங்கள், ப்ளூ பிரிண்ட் லீக் ஆகி இருப்பது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையும் படிங்க: லாக்அப் டெத்..! கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காணாம போய்டும்... நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்..!