லாக்அப் டெத்..! கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காணாம போய்டும்... நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தல்..!
லாக் அப் டெத் விவகாரத்தை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.
முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் “லாக்-அப்” மரணமடைந்தவரின் குடும்பத்தாருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் என்ற விசாரணைக் கைதியின் உடலில் 19 காயங்கள் இருப்பதாகவும், அவரின் கைகள் உடைக்கப்பட்டிருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியாகியுள்ள தகவல், கடும் அதிர்ச்சியளிப்பதோடு, வன்மையானக் கண்டனத்திற்குரியது என்றார்.
மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழகக் காவல்துறையினர், மனிதநேயத்தை இழந்த மூர்க்கர்களாக மாறிவருவது ஆபத்தானது என்றும் தவறு செய்தவர்களை, எவ்வித தனிமனித உரிமை மீறலும் இல்லாமல் விசாரிப்பது தான் காவல்துறையினரின் வேலையே தவிர, தங்கள் அதிகாரத்தையும், உடல் பலத்தையும், உள்ளுக்குள் புதைந்து கிடக்கும் பழைய கோபத்தையும் காட்டி, கைதிகளை பலியாக்குவது அல்ல என்றும் கூறினார்.
குற்றவாளிகளை தண்டிக்கும் உரிமை நீதித்துறைக்கு மட்டுமே உண்டு என்பதை, தமிழகக் காவல்துறையினருக்கு தற்போதைய முதல்வர் விஜயாவது உணர்த்த வேண்டும் என்றும் இல்லையேல் காவல்துறையின் மீது மக்கள் கொண்டுள்ள கொஞ்ச, நஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய்விடும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசு பள்ளிகளில் ஆயுத கலாச்சாரம்..! அமைச்சர் ராஜ்மோகனை கண்டித்த நயினார் நாகேந்திரன்..!!
எனவே, இச்சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை பேரையும் முறையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என கூறிய நயினார் நாகேந்திரன், குற்றவாளிகள் மீது எவ்வித சமரசமுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சபரிவர்மன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: தன் கட்சி ஊழலையே தட்டிக் கேட்க முடியாத CM..! லஞ்ச வேட்டை..! நயினார் தாக்கு.!