குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பெண்ணுக்கு அரிவாள் வெட்டு.! கணவன் வெறிச்செயல்.! போலீஸ் வலைவீச்சு.!!
குடும்ப நல நீதிமன்றத்திற்கு ஆஜராக சென்ற பெண்ணை கணவன் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராக வந்த இளம் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயமடைந்த இளம்பெண் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை தீவிர சிகிட்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் பட்ட பகலில் நீதிமன்றம் எதிரே உள்ள சாலையில் இளம்பெண்ணை வெட்டி சாய்த்த கணவரை தக்கலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் வின்சென்ட் ராஜ். வயது கூலி தொழிலாளியான இவருக்கும் பொன்மனை கிராமத்தை சேர்ந்த 31 வயதான ஜெர்லின் பிரேமா என்பவருக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில் 7 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ஜெர்லின் பிரேமா ஒரு கடையில் வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஜெர்லின் பிரேமா கழிந்த ஒன்றரை வருடங்களுக்கு முன் கணவரை பிரிந்து சென்ற நிலையில் விவாகரத்து கேட்டு தக்கலை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் ஆஜராக ஜெர்லின் பிரேமா தக்கலை நீதிமன்றம் சென்ற போது நீதிமன்றம் எதிரே உள்ள சாலையில் நின்று கொண்டிருந்த கணவர் வின்சென்ட் ராஜ் அவரை வழிமறித்து கையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பியோடியுள்ளார்.
இதையும் படிங்க: குமரியில் சினிமாவை மிஞ்சிய பயங்கரம்..! லவ் டார்ச்சரால் இளம் பெண் தற்கொலை.! பழித்தீர்த்த உறவினர்கள்..!!
அரிவாளால் வெட்டியதில் தலை மற்றும் கை கால்களில் படுகாயங்கள் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சாலையில் சரிந்த ஜெர்லின் பிரேமாவை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்த நிலையில், தகவலறிந்து வந்த தக்கலை போலீஸார் மனைவியை அரிவாளால் வெட்டி தப்பியோடிய வின்சென்ட் ராஜை வழக்கறிஞர்கள் உதவியுடன் பிடித்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் பட்ட பகலில் நீதிமன்றம் எதிரில் நடந்த இந்த அரிவாள் வெட்டு சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் குறித்து அவதூறு! ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஆஜர்!