மீண்டும் வெளியே வருகிறார் அத்திவரதர்... 12 ஆண்டுகளுக்குப் பிறகு அரிய நிகழ்வு... வெளியானது அதிமுக்கிய அறிவிப்பு...!
காஞ்சிபுரத்தில் அத்தி வரதர் குளத்தில் உள்ளார். கும்பகோணத்தில் பாதாள அறையில் உள்ளார்.
கும்பகோணம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொது மக்களுக்கு காட்சி அளிக்கும் அத்திவரதர் எதிர்வரும் மார்ச் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை பொதுமக்கள் காட்சிக்கு வைக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
தமிழகத்தில் பிரம்மனுக்கு கோவில் உள்ள ஒரு சில இடங்களில் ஒன்று கும்பகோணம்.
கும்பகோணத்தில் பிரம்மன் கோவிலை நிர்வகிக்கும் சௌராஷ்ட்ரா சபையினர் வரதராஜ பெருமாள் என்ற கோவிலையும் நிர்வகித்து வருகின்றனர். பிரம்மன் கோவில் அருகிலேயே வரதராஜ பெருமாள் ஆலயமும் உள்ளது . வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பாதாள தனி அறையில் ஸ்ரீதேவி, பூமி தேவி சமேத அத்திவரதர்உள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் . எதிர்வரும் மார்ச் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் அத்திவரதர் காட்சிப்படுத்தப்படும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர் .
இதையும் படிங்க: கடைந்தெடுத்த ரவுடிகள்... கொலைகார கூடாரம் திமுக..!! கட்சிக்காரங்கள அடக்குங்க ஸ்டாலின்..! நயினார் விளாசல்..!!
கடந்த நூற்றாண்டில் 93 வருடம் பாதாள அறையிலேயே இருந்த அத்திவரதர் 2013 ஆம் ஆண்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக வெளியே கொண்டுவரப்பட்டார். தற்போது அத்தி வரதர் ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் விதிகள் திருத்தப்பட்டுள்ளது என்றும் அதன் படி எதிர்வரும் மார்ச் முதல் தேதியில் இருந்து பத்தாம் தேதி வரை இரண்டடி உயரம் உள்ள ஸ்ரீதேவி பூமிதேவி சமேத அத்திவரதர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என கோவில் நிர்வாகத்தினர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: INS அஞ்சதீப்..! நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு..!!