×
 

பூட்டிய வீட்டுக்குள் காத்திருந்த அதிர்ச்சி... சடலமாக கிடந்த இளம் தம்பதி... திருமணமான 9 நாளில் விபரீத முடிவு...!

குன்றத்தூரில் திருமணமான ஒன்பது நாளே ஆன இளம் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குன்றத்தூரில் பூட்டிய வீட்டிற்குள் திருமணமான ஒன்பதே நாள் ஆன இளம் தம்பதி சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம் கட்டளை பகுதியில் வசித்து வந்தவர் விஜய். இவர் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். தன்னுடன் பணியாற்றிய யுவஸ்ரீ என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். கடந்த 13 ஆம் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டே இருந்துள்ளனர்.

திருமணம் ஆகி ஒன்பதே நாள் ஆன நிலையில் பூட்டிய அறைக்குள் இருவரும் சடலமாக இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. யுவஸ்ரீ என் தங்கை வீட்டிற்கு சென்ற போது நீண்ட நேரமாக கதவு பூட்டப்பட்டிருந்ததால் சந்தேகம் அடைந்துள்ளார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் பூட்டிய அறையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. யுவஸ்ரீ சடலமாக கிடந்த நிலையில் விஜய் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்த நிலையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது இருவருக்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்ட யுவஸ்ரீ ஐ கொன்றுவிட்டு விஜய் தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒன்பது நாட்களே ஆன நிலையில் இளம் தம்பதியின் இந்த முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கொஞ்சம் தள்ளியே வாங்கப்பா.. இன்னும் EMI முடியல..!! இணையத்தில் உலா வரும் கார் ஸ்டிக்கர்..!!

தற்கொலை எதற்கும் தீர்வாகாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்கொள்ளும் மனநிலையை கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் பலரின் ஆதங்கமாக இருக்கிறது. அதிலும் திருமணமான இளம் தம்பதிகள் இடையே அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்யும். அப்படி இருக்கும் போது அதனை சரி செய்யவோ அல்லது சமாளிக்கவோ கற்றுக்கொள்ள வேண்டுமே தவிர தற்கொலை செய்து கொள்வது என்பது சரியான முடிவாக இருக்காது என்றும் கருதுகின்றனர். குன்றத்தூரில் இளம் தம்பதியின் இந்த முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: உழவர் நலன் காக்கும் சாதனைகள் தொடரும்... முதல்வர் ஸ்டாலின் உறுதி

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share