×
 

குஷ்பூ வீட்டில் டும்.. டும்.. டும்..! முதல்வர் விஜய்யை நேரில் சென்று அழைத்த சுந்தர். சி குடும்பத்தினர்..!!

குஷ்புவின் மகள் திருமணத்திற்கு முதல்வர் விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் பிரபல தம்பதியரான இயக்குநர் சுந்தர் சி மற்றும் நடிகை-அரசியல்வாதி குஷ்பூவின் குடும்பத்தில் திருமணக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அவர்களின் மூத்த மகள் அவந்திகா சுந்தர் விரைவில் ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் என்பவருடன் திருமணம் செய்து கொள்ள உள்ள நிலையில், குடும்பத்தினர் முக்கிய பிரமுகர்களுக்கு நேரில் அழைப்பிதழ் வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை வழங்கியுள்ளனர். இந்த சந்திப்பு திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. 

 தமிழ்நாட்டின் முதலமைச்சருமான விஜயை இல்லத்தில் சந்தித்து, எங்கள் மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை ஷ்ரவன் ஸ்ரீனிவாசனுடன் இணைந்து நேரில் வழங்கும் வாய்ப்பு கிடைத்தது” என்று குஷ்பு குறிப்பிட்டுள்ளார். குஷ்பூவுடன் சுந்தர் சி, அவந்திகா, அனந்திதா மற்றும் மணமகன் ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ராஜ்யசபா சீட்டுக்கு முந்தும் காங்கிரஸ்!! விஜய் யோசனை! பா.சிதம்பரத்தை தொடர்ந்து கிரிஷ் சோடங்கரும் அழுத்தம்!

இந்த சந்திப்பு சிறப்பு வாய்ந்தது என்பதற்கு காரணம், குஷ்பூ தற்போது பாஜகவின் தமிழக துணைத் தலைவராக இருக்கும் நிலையில், விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். அரசியல் ரீதியாக வெவ்வேறு தளங்களில் இருந்தாலும், தனிப்பட்ட உறவு மற்றும் பாசம் எந்த மாற்றமும் இன்றி தொடர்வதை இந்த நிகழ்வு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. குஷ்பூ நீண்ட காலமாக விஜய்யை “தம்பி” என்று அழைத்து வருகிறார் மற்றும் அவரது அரசியல் பயணத்தின்போதும் நட்பை முன்னிலைப்படுத்தியுள்ளார். சுந்தர் சியும் இதே நிலைப்பாட்டைப் பின்பற்றி வருகிறார். 

இதையும் படிங்க: எடப்பாடியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டாரா..? உண்மையைப் போட்டு உடைத்த அதிமுக..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share