×
 

இசை ஜாம்பவான் இளையராஜாவின் மாஸ் அறிவிப்பு... அடுத்த சிம்பொனி ரெடி... ரசிகர்கள் செம்ம குஷி...!

தனது அடுத்த சிம்பொனி குறித்து முக்கிய அறிவிப்பை இசைஞானி இளையராஜா வெளியிட்டார்.

இசையின் ஜாம்பவான் இசைஞானி இளையராஜா, 82 வயதிலும் தனது படைப்பாற்றலை இழக்காமல், உலக அளவில் புதிய அளவுகோல்களை நிர்ணயித்து வருகிறார். 2025-ஆம் ஆண்டு அவரது சிம்பொனி வேலியன்ட் உலகம் முழுவதும் பெரும் புகழ் பெற்றது. லண்டனில் மார்ச் 8-ம் தேதி ராயல் பில்ஹார்மோனிக் கச்சேரி அமைப்பின் மூலம் நடைபெற்ற இந்த முதல் சிம்பொனி அரங்கேற்றம், இந்திய இசையின் பாரம்பரியத்தை மேற்கத்திய கிளாசிக்கலுடன் இணைத்து, வரலாற்று சிறப்பைப் பெற்றது.

இந்த சிம்பொனி, தைரியம், போராட்டம், வெற்றி ஆகிய கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு, 80 வாத்தியக்கருவங்கள் இணைந்து உருவாக்கப்பட்ட இசை அலைகளாக வெளிப்பட்டது. இளையராஜாவின் கையொப்பமான மெட்டு, ராகங்கள், லயம் ஆகியவை இதில் மென்மையாகப் பின்னிப்பிணைந்திருந்தது. இதனால் ரசிகர்கள் மட்டுமின்றி உலக இசை விமர்சகர்களும் அதைப் பாராட்டினர்.

ஆனால் இளையராஜாவின் பயணம் இங்கேயே நின்றுவிடவில்லை. அவரது சிம்பொனி வேலியன்ட் லண்டனில் அரங்கேறிய சில மாதங்களுக்குப் பிறகே, ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழ்நாட்டில் தனது மக்களுக்காக அதே லண்டன் பில்ஹார்மோனிக் அமைப்புடன் நிகழ்த்தினார். சென்னையின் நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, இளையராஜாவின் 50 ஆண்டு சினிமா இசை வாழ்க்கையின் தங்க ஜூபிலி விழாவாகவும் அமைந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழா, சிம்பொனியின் இசையை நேரடியாக அனுபவிக்க வாய்ப்பளித்தது. இளையராஜா தனது பிறந்தநாள் அன்று வெளியிட்ட அறிவிப்பில், இது எனது மக்களுக்கான பரிசு என்று கூறினார். 

இதையும் படிங்க: சூதானமா இருங்க மக்களே... இன்னும் 3 அடி தான் பாக்கி... வெளியானது அவசர எச்சரிக்கை...!

இப்போது, 2025 அக்டோபர் 20-ம் தேதி, தீபாவளி பண்டிகையின் முன், இளையராஜா மீண்டும் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தனது தாயின் நினைவு தினத்தை முடித்துவிட்டு, அடுத்த சிம்பொனியை எழுத இருக்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார். இது அவரது இரண்டாவது சிம்பொனி என்பது உறுதி, மேலும் இதில் 'சிம்பொனிக் டான்சர்ஸ்' என்ற புதிய இசைக்கோர்வை ஒரு சிறப்பு அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: முடிஞ்சுது தீபாவளி... சென்னையில் இத்தனை மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகளா? அதிர்ச்சி ரிப்போர்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share