×
 

ஸ்ரீசன் பார்மாவால் வந்த சிக்கல்... அலர்ட் ஆன தமிழ்நாடு அரசு... அனைத்து மருந்து நிறுவனங்களுக்கும் பறந்த அதிரடி உத்தரவு...!

ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருந்து தயாரிக்கும் உரிமங்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அந்நிறுவனம் மூடப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மத்திய பிரதேச மாநிலம் சிந்துவாரா மாவட்டத்தில திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகள் சிறுநீரகம் செயலிழந்து அடுத்தடுத்து உயிரிழந்தார்கள். அதேபோல ராஜஸ்தான் மாநிலத்திலும் கூட குழந்தைகள் உயிரிழந்தான்ர். இதனையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழகத்தைச் சேர்ந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார் சத்திரத்தில்  உள்ள ஸ்ரீசென் ஃபார்மா என்ற நிறுவனம் தயாரித்த ‘கோல்ட்​ரிப்’என்ற இருமல் மருந்தை உட்கொண்டது தான் காரணம் என தெரியவந்தது. 

அந்த மருந்தில் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்கள் எல்லாம் இருந்ததும் அடுத்தடுத்த ஆய்வில்ல கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று காலையிலேயே சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கோல்ட்​ரிப் நிறு​வனத்​தின் உரிமை​யாளர் ரங்​க​நாதனை(75) மத்​தி​யப் பிரதேச போலீ​ஸார் கைது செய்துள்ளனர். 

இதையும் படிங்க: பூசணி தோட்டத்தையே சோத்துல மறைக்கப் பாக்குறாங்க… திமுகவை விளாசிய அதிமுக எம்.பி…!

இதன் தொடர்ச்சியாக, இன்று காலை சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீசென் ஃபார்மா நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதன் வீடு மற்றும் அலுவலகம், தமிழக உணவு மற்றும் மருந்து மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாகத்தினுடைய இயக்குனர் தீபா, தமிழக உணவு மற்றும் மருந்து மருந்து தர கட்டுப்பாட்டு நிர்வாகத்தினுடைய இணை இயக்குநர் கார்த்திகேயன் மற்றும் காஞ்சிபுரத்தில் 2 அதிகாரிகள் வீடுகளிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றன்ர். 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி அன்று (1.10.2025) பிற்பகல் சுமார் 3.30 மணியளவில், மத்தியப் பிரதேச மாநில மருத்து கட்டுப்பாடு துறையிடம் இருந்து தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு துறைக்கு ஒரு கடிதம் பெறப்பட்டது.

உடனடியாக மத்தியப்பிரதேச மாநிலம் சிந்தவரா மாவட்டத்தில் ஏற்பட்ட குழந்தைகள் மரணத்துக்கு காரணமாக கருதப்படும் மருத்து கோல்ட்சிஃப்சிடிப் (பாராசிட்டமால்ஃபீனைல்ஃரன் ஹைட்ரோகுளோாடு, குளோரிபெனிரமன் மெலேட் சிரப்) குறித்த விவரம் பெறப்பட்டது. உடனடியாக அந்த மருந்துகள் சோதனைக்காக எடுக்கப்பட்டு, சென்னையில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. அப்போது கோல்ட்ரிஃப் சிரப்பில் டைஎதிலீன் கிளைகால் (Dethylene Gyout DEG) என்ற நச்சு வேதிப்பொருள் கண்டறியப்பட்டதால். 03-10-2025 அன்றே ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்திற்கு பொதுநலன் கருதி மருத்து உற்பத்தியை உடனடியாக நிறுந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் தொடர் நடவடிக்கையாக ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் மருத்து உரியங்கள் முழுவதுமாக முன் ரத்து செய்யப்படகூடாது (Cancion)விலக்க கேட்டு 03.10.2025 அன்றே குறிப்பாணையும் அனுப்பப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனம் மருந்து தயாரிப்பில் ஈடுபட முழு ரத்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள இதர மருத்து உற்பத்தி நிறுவனங்கள் மீதும் விரிவான ஆய்வு மேற்கொள்ள ஆணைகள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING 2 ஆண்டுகளுக்குப் பிறகு நரகத்திலிருந்து விடுதலை... 7 பணயக்கைதிகளை விடுவித்தது ஹமாஸ்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share