×
 

சிங்கப்பெண் அதிரடிப்படை தொடக்க விழா எப்போது?... தேதி குறித்த முதலமைச்சர் விஜய்...!

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை திட்​டத்தை முதல்​வர் விஜய் நாளை மாலை சென்​னை​யில் தொடங்கி வைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மே 10 ஆம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட முதலமைச்சர் ஜோசப் விஜய் , சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை திட்டத்தை அறிமுகப்படுத்தினார். 

இதைத் தொடர்ந்​து, அதிரடிப் படை​யின் ஐ.ஜி.​யாக பவானீஸ்​வரி நியமிக்​கப்​பட்​டார். இந்த படை​யில் மேலும், ஒரு எஸ்​.பி. 2 டிஎஸ்​பி, மற்​றும் 4 ஆய்​வாளர்​கள் உட்பட 30-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சிங்​கப்​பெண் அதிரடிப் படை​யில் இடம்​பெறும் பெண் போலீ​ஸார் மற்​றும் பெண் எஸ்​.ஐ.களுக்கு நேவி ப்ளூ நிற சட்டை - காக்கி பேன்ட் என்ற சிறப்பு சீருடை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. கருப்பு தொப்​பி, கருப்பு ஷூ என பார்ப்​ப​தற்கு மிடுக்​காக காணப்​படும் வகை​யில் இந்த சீருடை வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது.

பொது இடங்களிலும், இணைய வழியிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களைத் தடுப்பதே இந்த அதிரடிப்படையின் முதன்மையான நோக்கமாகும். பேருந்து நிறுத்தங்கள், இரயில் நிலையங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (IT Parks), கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக வளாகங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அவசரக் காலங்களில் உடனடி விரைவுப் பாதுகாப்பு வழங்குவது முக்கியமாகும். 

இதையும் படிங்க: பிலிப்பைன்ஸில் 8.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... அலறியடித்து ஓடிய மக்கள்... அண்டை நாடுகளுக்கு பறந்த சுனாமி எச்சரிக்கை...!

ஆனால் தொடர்ந்து 2 முறை இதன் தொடக்க விழா தள்ளிப்போயுள்ளது. அதில் ஒன்று, மே 27 ஆம் தேதி நடைபெற இருந்த விழா, டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் விஜய் சந்திக்கப் போனதால் தள்ளிப்போனது. அதற்கு அடுத்து சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை திட்​டத்தை முதல்​வர் விஜய் கடந்த 29-ம் தேதி தொடங்கி வைப்​ப​தாக இருந்​தது. ஆனால், பல்​வேறு காரணங்​களால் கடைசி நேரத்​தில் இந்த நிகழ்ச்சி தள்​ளிவைக்​கப்​பட்​டது. 

கடந்த வாரம் திருச்சி கிழக்கு தொகுதி வாக்​காளர்​களுக்கு நன்றி தெரிவிக்​கும் கூட்​டத்​தில் பேசிய முதல்​வர் விஜய், “சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படை அடுத்த வாரம் தொடங்கி வைக்​கப்​படும்’ என்று அறி​வித்​தார். அதன்​படி, சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நாளை (ஜூன் 9) மாலை 5 மணிக்கு நடை​பெறும் நிகழ்​வில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் படையை முதல்​வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 

இதையும் படிங்க: பெரம்பூர் சூட்கேஸில் உடல்... செங்கல்பட்டில் தலை... தமிழகத்தையே உலுக்கிய கொலையில் வெளியான பகீர் உண்மை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share