×
 

சப்பா...!! இப்பவே கண்ணக் கட்டுதே... கார் இன்ஜினை திறந்து பார்த்த பறக்கும் படைக்கு ஷாக்...!

என்ஜின் பேனட்டில் வைத்து வித்தியாசமான முறையில் பாண்டிச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 150 புதுச்சேரி  மதுபாட்டில்கள் பறிமுதல்

மாடூர் சுங்கச்சாவடி பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் மேற்கொண்ட வாகன  சோதனையின் போது காரின் இஞ்சின் பேனட்டை  திறந்த போது அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி ; என்ஜின் பேனட்டில் மறைத்து வைத்து புதுச்சேரி மது பாட்டில்களை கடத்தி வந்தது அம்பலம்

சட்டப்பேரவை தேர்தலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் கள்ளக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் விஜய் தலைமையிலான அலுவலர்கள் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாடூர் சுங்கச்சாவடி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அந்த வழியாக சேலம் மார்க்கமாக சென்ற புதுச்சேரி பதிவென் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்த போது இஞ்சின் பேனட்டில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில் உடனடியாக இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: எடை குறையும் கேஸ் சிலிண்டர்! தட்டுப்பாடை தவிர்க்க புது ரூட்!! எண்ணெய் நிறுவனங்கள் ஐடியா?!

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த காரை கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு எடுத்து வந்தனர். கார் என்ஜின் பேனட்டை ஓபன் செய்து அதிலிருந்து எடுக்க எடுக்க புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து கார் முழுவதுமாக சோதனை செய்து காரின் பல்வேறு இடங்களில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட சுமார் 1 லட்சம் மதிப்பிலான 150 புதுச்சேரி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து இது தொடர்பாக கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் முருகன் அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரில் மறைத்து வைத்து புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்த புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் மற்றும் புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.மேலும் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வர பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 150 புதுச்சேரி மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 


தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் சிக்காமல் இருக்க இன்ஜின் பேனட்டில் மறைத்து வைத்து மதுபாட்டில்களை கடத்த முயன்ற நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: போரால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு..!! மீண்டும் தலைதூக்கும் மைனஸ் விலை..!! தலையில் அடித்துக்கொண்டு புலம்பும் நாமக்கல் பண்ணையாளர்கள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share