×
 

"லாக் அப் டெத்" ...விளைவு மோசமா இருக்கும்! முதல்வர் ஸ்டாலின் வார்னிங்!

யார் கடமை தவறினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்தார். நகை திருட்டு தொடர்பாக அஜித்குமார் மீது புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். போலீசார் தாக்கியதில் அஜித் குமார் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தால் அனைத்து தரப்பினரும் கடும் கண்டனங்கள் கூறிய நிலையில், சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போனதாக கூறினர். இந்த நிலையில், சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சரின் மு.க ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்தியிருந்தார். சட்டம் ஒழுங்கு டிஜிபி, காவல் ஆணையர், உள்துறை செயலாளர் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். 

இதையும் படிங்க: அடிச்சு கொன்னுட்டீங்களே... அவரு என்ன தீவிரவாதியா? தமிழக அரசுக்கு கோர்ட் சரமாரி கேள்வி..!

அப்போது, காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்று தந்து நீதி நிலை நாட்டப்படும் என தெரிவித்தார். யார் கடமை தவறினாலும் அரசை நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்று எச்சரித்தார். சட்டம் ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், குற்றங்களில் ஈடுபடுவோர் அரசியல் பின்பலம் கொண்டவரே ஆனாலும் தண்டனை விரைவில் பெற்று தரப்படும் எனவும் கூறினார். மேலும், போதைப் பொருள் கலாச்சாரம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் என யார் கடமை தவறு இருந்தாலும் அரசு நடவடிக்கை கடுமையாக இருக்கும் என தெரிவித்தார். 

இது தொடர்பான முதல்வர் ஸ்டாலின் பதிவில், குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்...மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது. போதைப் பொருள் - கள்ளச்சாராயம் - பெண்கள் பாதுகாப்பு - லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிக கடுமையாக இருக்கும் என்பதைச் சட்டம் - ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன். இவ்வாறு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: என்னைக்குமே DMK தான் மாஸ்! ஏன் தெரியுமா..? TKS சொன்ன சீக்ரெட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share