×
 

விடிந்ததுமே ஷாக்...!! - அரசு பஸ் மீது அடுத்தடுத்து பயங்கரமாக மோதிய 2 லாரிகள் - 40 பயணிகளின் நிலை என்ன?

சென்னையிலிருந்து புதுவை நோக்கி சென்ற லாரி டிரைவர் திண்டிவனம் அடுத்த கிளியனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் விபத்தில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் லாரி மோதியதில் எதிர்சாலைக்கு சென்ற அரசு பேருந்து மீது மற்றொரு லாரி மோதியதில் ஒருவர் பலியான நிலையில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

நாகர்கோயிலிருந்து சென்னையை நோக்கி சென்ற அரசு சொகுசு பேருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு திண்டிவனம் அம்மா டீ டைம் சவாதி சாலை அருகே சென்று கொண்டிருந்தது. நான்கு முனை சந்திப்பு வரும்போது திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து புதுவை மார்க்கமாக சென்ற லாரி அரசு பேருந்து மீது மோதியது. 

இந்நிலையில் அரசு பேருந்து நிலைத்தடுமாறி சென்னை மார்க்கமாக செல்லும் சாலைக்கு திரும்பியது. அப்போது சென்னையிலிருந்து புதுவை நோக்கி வந்த லாரியானது மீண்டும் அரசு பேருந்து மீது மோதியது. இதனால் நிலைகுலைந்த அரசு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அரசு பேருந்தில் பயணம் செய்த 40-க்கும் மேற்பட்ட பயணிகள் படுங்க காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இதையும் படிங்க: அடுத்தடுத்து பைக்குகள் மீது ஏறி இறங்கிய லாரி... +2 மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி...!

சென்னையிலிருந்து புதுவை நோக்கி சென்ற லாரி டிரைவர் திண்டிவனம் அடுத்த கிளியனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் விபத்தில் லாரியில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தீயணைப்பு துறை உதவியுடன் லாரி டிரைவரின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால் திண்டிவண்ணம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் சுமார் 5 கிலோமீட்டக்கு மேலாக கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

போக்குவரத்தை திண்டிவனம் மற்றும் ரோசனை போலீசார் போக்குவரத்தை சரி செய்து வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரோசனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு காரணமாக காரணமான ஆந்திரா என் கொண்ட திருவண்ணாமலை மார்க்கத்திலிருந்து புதுவை மார்க்கமாக சென்ற லாரி ஓட்டுனர் லாரியை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார். லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: துடைக்கும் போது வெடித்த துப்பாக்கி!! குண்டு பாய்ந்ததில் டி.எஸ்.பி மரணம்! பஞ்சாப்பில் சோகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share