அடுத்தடுத்து பைக்குகள் மீது ஏறி இறங்கிய லாரி... +2 மாணவர்கள் இருவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி...!
12ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த இரண்டு மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தியூர் அருகே அடுத்தடுத்து இரண்டு இருசக்கர வாகனங்களின் மீது லாரி மோதி விபத்து. பிளஸ் டூ முடித்த இரண்டு பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு ; சிறுமி உட்பட இருவர் படுகாயம்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெளித் திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் பிரசாந்த் (17), பவானி காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த தேவ் (18) நண்பர்கள் ஆன இருவரும் அந்தியூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 முடித்துவிட்டு தேர்வு முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் ஜீவன் பிரசாத் அவரது கேடிஎம் டியூக் பைக்கில் நண்பரான தேவ் அழைத்துக் கொண்டு அம்மாபேட்டை- அந்தியூர் சாலையில் அந்தியூர் நோக்கி வந்துள்ளனர். இருசக்கர வாகனமானது அந்தியூர் அருகே அண்ணாமடுவு பகுதியில் உள்ள துணை மின் நிலையம் பகுதியில் வந்தபோது, எதிரே லாரி ஒன்று வலது புறமாக ஏரி (முன்னாள் வந்த வாகனத்தை முந்திக்கொண்டு) வந்துள்ளது இதில் எதிரில் லாரி வருவதைப் பார்த்த ஜீவன் பிரசாத் நிலைகுலைந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது,
இதையும் படிங்க: துடைக்கும் போது வெடித்த துப்பாக்கி!! குண்டு பாய்ந்ததில் டி.எஸ்.பி மரணம்! பஞ்சாப்பில் சோகம்!
தொடர்ந்து பின்னால் வந்த மற்றொரு இரு சக்கர வாகனத்தின் மீதும் லாரி மோதி நின்றது. இந்த விபத்தில் கேடிஎம் டியூக் பைக்கில் வந்த ஜீவன் பிரசாத் கை துண்டான நிலையிலும், தேவ் தலை சிதறியும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த பூதப்பாடி ஊஞ்சப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரேம் (27) மற்றும் அவரது தங்கை முறை உறவினரான கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி நிவி ஸ்ரீ ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர், தொடர்ந்து அவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து அந்தியூர் போலீசார் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (53) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . பிளஸ் டூ தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த இரண்டு மாணவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நேருக்கு நேர் மோதிய கார் - பேருந்து! - கண்ணிமைக்கும் நேரத்தில் பறிபோன 3 உயிர்... நடந்தது என்ன?