×
 
☰

இனிமே தான் இருக்குது.! அக்டோபர் 23-ல் வங்கக்கடலில் காற்றழுத்தம்..! இந்திய வானிலை மையம் தகவல்.!!

வங்கக்கடலில் காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வரும் அக்டோபர் 23ஆம் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தாய்லாந்து வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி, நாளை அந்தமான் கடலுக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தாக்கத்தால் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும்.

இந்த அமைப்பு பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுப்பெறும் வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவான பிறகு அதன் தீவிரம் மற்றும் பாதை குறித்த தெளிவான படம் கிடைக்கும். தற்போதைய கணிப்புகளின்படி, இது மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். சில கணிப்புகள் அது ஆழ்ந்த தாழ்வு மண்டலமாகவோ அல்லது சூறாவளிப் புயலாகவோ வளர வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டுகின்றன.

சில மாதிரிகள் அதை ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகர்த்துவதாகவும், வேறு சில மாதிரிகள் தெற்கு திசையில் தமிழ்நாடு அல்லது பிற பகுதிகளை நோக்கிச் செல்வதாகவும் காட்டுகின்றன.வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இந்த புதிய அமைப்பு தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் மழைப்பொழிவை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை அதிகரிக்கலாம். அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் மழை மற்றும் காற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: வெளுக்க போகுது..! சென்னைக்கு கனமழை எச்சரிக்கை..! 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்..!!

கடல் பரப்பில் அலைகள் உயரக்கூடும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்தமான் கடலில் 23 முதல் 25ஆம் தேதி வரை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பு உருவாவதற்கு முன்பே வங்கக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. கடலோரப் பகுதிகளில் காற்று வேகம் அதிகரிக்கக்கூடும். விவசாயிகள் தங்கள் பயிர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறைந்த பகுதிகளில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: புரட்டி எடுக்கப்போகும் மழை..! தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..! வானிலை அப்டேட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share