வீட்டில் கேஸ் சிலிண்டர் இருக்கா? - தீபாவளிக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சிக்கல்... எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அதிரடி முடிவு...!
எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் எல் பி ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே காணொலி காட்சி மூலம் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி. வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என அறிவிப்பு.
தமிழ்நாடு கேரளா ஆந்திரா தெலுங்கானா கர்நாடக புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்
இந்த சங்கம் நாமக்கல் லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 5,000 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி பி.பி.சி எச்.பி.சி ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாரி உரிமையாளர்களுக்கு இடையேயான ஒப்பந்தம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. 3 எண்ணெய் நிறுவனங்களும் 2025-30 ஆம் ஆண்டுக்கான புதிய டெண்டரில் டேங்கர் லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில் பல விதிமுறைகளை கொண்டு வந்தன. இதனால் தற்போது ஓடி கொண்டு இருக்கும் சுமார் 5 ஆயிரம் லாரிகளும் டெண்டரில் பங்கேற்க முடியவில்லை.
இதையும் படிங்க: முதலமைச்சர் விஜய்... கண்டிஷன் ஓகேவா இபிஎஸ்? டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி
அவர்கள் கேட்டபடி 3500 வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கேட்டு ஆன்லைன் டெண்டரில் சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர். தற்போது சுமார் 2700 வாகனங்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு கிடைத்து அதற்கான அனுமதி கடிதம் கிடைத்துள்ளது. சுமார் 800 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. டெண்டரில் பங்கேற்ற அனைத்து லாரிகளுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த 9 ந் தேதி மதியம் முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தென் மாநிலம் முழுவதும் இன்று (11-10-2025) மூன்றாவது நாளாக வேலை நிறுத்தம் போராட்டம் நீடித்தது.இதனால் எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெறுங்கள் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளிடம் கேட்டு கொண்டனர்.
மேலும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்க கோரி இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 3 எண்ணெய் நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் இடையே இன்று காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படவில்லை.
இதனையடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர போவதாக தென் மண்டல எல் .பி .ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாலு போயி கத்தி வந்தது! டும்...டும்... டும்... - ஆனந்த் போய் ஆதவ் வந்தது டும்..டும்..டும்... அப்செட்டில் தவெக தொண்டர்கள்...!