×
 

மழை அடிச்சாலும் தண்ணி தேங்கல... முன்னப்போல இப்ப இல்ல! அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி...!

பருவமழையை எதிர்கொள்ள ஒவ்வொரு துறையும் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட்டு வருகிறது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அதன் தீவிரம் தற்போது அதிகரித்து வருகிறது. வடகிழக்கு பருவமழையின் எதிரொலியாக தமிழக முழுவதும் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு குடியிருப்புகள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுவதை தடுக்க தமிழக அரசின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிக்க அதிகாரிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு இடங்களுக்குச் சென்று தண்ணீர் தீங்குவது தொடர்பாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே, அனைத்து சேவைத் துறைகளும் முழுமையாகத் தயாராக இருக்குமாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததாக கூறினார்.

அதன்படி, ஒவ்வொரு துறையும் விரைவாகவும் திறமையாகவும் செயல்பட்டு வருகிறது என்றார். கடந்த இரண்டு நாட்களாக, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சென்னை முழுவதும் பல பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார் என்றும், குறிப்பாக கடந்த காலங்களில் மழைநீர் தேங்கி நின்ற இடங்களை ஆய்வு செய்து வருகிறார் எனவும் தெரிவித்தார். சென்னையில் பல்வேறு பகுதிகளில் சுமார் 10 செ.மீ மழை பெய்துள்ளது என்றும் முந்தைய ஆண்டுகளில், நான்கு முதல் ஐந்து சென்டிமீட்டர் மழை பெய்தாலும் சென்னை முழுவதும் பல சாலைகளில் கடுமையான நீர் தேங்கி, சுரங்கப்பாதைகள் வெள்ளத்தில் மூழ்கி பயன்படுத்த முடியாததாகிவிடும் என கூறினார்.

இதையும் படிங்க: நாங்க நடவடிக்கை எடுக்கலையா? பேரவையில் வெடித்த கிட்னி முறைகேடு விவகாரம்...!

ஆனால் இப்போது, நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்தாலும், சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்றும் மேலும் வாகனங்கள் சுரங்கப்பாதைகள் வழியாக வழக்கம் போல் செல்கின்றன என்றும் தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 8 மணி நேரத்தில் உடற்கூறு ஆய்வா? EPS- க்கு பேரவையில் அமைச்சர் மா சுப்பிரமணியன் பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share