×
 

திருப்பரங்குன்றம் தல விருட்சத்தில் தர்கா கொடி!! கல்லத்தி மரத்தில் முஸ்லிம் பிறைகொடி ஏற்றப்பட்டதால் வழக்கு!

மதுரை, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் தல விருட்சமான கல்லத்தி மரத்தில், அத்துமீறி பிறை கொடி ஏற்றியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் மலை உச்சியில் உள்ள தல விருட்சமான கல்லத்தி மரத்தில் அத்துமீறி பிறை சின்னம் கொண்ட சந்தனக்கூடு கொடி கட்டியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த மலை உச்சியில் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடன் சேர்ந்து சிக்கந்தர் பாதுஷா தர்காவும் உள்ளது. கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இரவு, தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, தர்கா தரப்பினர் கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் கொடி கட்டியதாக கூறப்படுகிறது.

இதை எதிர்த்து ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் சோலைகண்ணன், ஹிந்து தமிழர் கட்சி ராம ரவிக்குமார் உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் கோவில் நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், கோவில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.

இதையும் படிங்க: பற்றி எரியும் தி.குன்றம் விவகாரம்..!! திமுகவின் திட்டமிட்ட அரசியல் மோதலா..?? கிளம்பும் எதிர்ப்புகள்..!!

இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூண் தீபம் ஏற்றுதல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது, மதுரை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கோவில் நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினார்.

"கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தர்கா கொடி ஏற்ற அனுமதி ஏன் கொடுத்தீர்கள்?" என்று கேட்ட நீதிபதி, போலீசில் புகார் அளிக்க உத்தரவிட்டார்.

இதன்படி, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் சத்தியசீலன் போலீசில் புகார் அளித்தார். புகாரில், "மலை மற்றும் காலியிடங்கள் உட்பட கல்லத்தி மரம் கோவில் கட்டுப்பாட்டில் உள்ளது. டிசம்பர் 21 இரவு அனுமதியின்றி அத்துமீறி சென்று கொடி கட்டியது சட்டவிரோதம். இது குற்றச்செயல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், போலீசார் தர்கா நிர்வாகம் சார்ந்தவர்கள் மீது அனுமதியின்றி மலை ஏறியது, சட்டவிரோதமாக நுழைந்தது, கோவில் சொத்தில் அத்துமீறல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் திருப்பரங்குன்றம் மலையில் தொடரும் மத ரீதியான சர்ச்சைகளுக்கு மேலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் போலீஸ் நடவடிக்கைகள் மூலம் உண்மை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஓயாத திருப்பரங்குன்றம் சர்ச்சை! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! ஹைகோர்ட் அதிரடி தடை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share