×
 

எம்.எல்.ஏ.க்கள் வெற்றி செல்லுமா? செல்லாதா? உயர்நீதிமன்றத்தில் சூடுபிடித்த வழக்குகள்..! பதிலளிக்க ஆணை..!!

தேர்தல் வெற்றிகளை எதிர்த்த வழக்குகளில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளை எதிர்த்து தொடரப்பட்ட பல தேர்தல் வழக்குகளில் முக்கியமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட பல்வேறு எம்.எல்.ஏ.க்களுக்கு மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த தளவாய் சுந்தரம், லீமா ரோஸ் மார்டின் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த சி.வி.கணேசன் உள்ளிட்டோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமான தேர்தல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. சுமார் 55 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்குகளில் பல உயர்மட்ட அரசியல் தலைவர்களின் வெற்றிகளை சவாலுக்கு உள்ளாக்கியவை.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர்களுக்கு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்ய ஒரு வார அவகாசம் அளித்து, பின்னர் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். விசாரணையை மூன்று வாரங்களுக்கு தள்ளிவைத்தனர். 

இதையும் படிங்க: கரூர் அரசு வேலை விவகாரம்... மீண்டும் ஹை கோர்ட்டில் எதிர்ப்பு மனு..! விஜய் அரசுக்கு சவால்..!!

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினின் வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, தோல்வியடைந்த வேட்பாளர் மிலானி தேர்தல் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு உள்ளிட்ட சில வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி. அருள்முருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மூன்று வாரங்களில் பதில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். 

இதையும் படிங்க: #BREAKING: TET ரிசல்ட் வெளியிட இடைக்காலத் தடை... திடீர் திருப்பம்... ஹைகோர்ட் அதிரடி உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share