×
 

டாஸ்மாக் வழக்கு... அதிரடி காட்டிய ஹைகோர்ட்... கார்த்திக்குக்கு ஜாமின் மறுப்பு..!!

டாஸ்மாக் வழக்கில் கார்த்திக்கின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கரூரைச் சேர்ந்த கார்த்திக்கின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நீதிபதி லட்சுமி நாராயணன் இவ்வுத்தரவை பிறப்பித்தார்.தமிழ்நாடு மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக்கில் மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமங்கள் வழங்குதல் மற்றும் மதுபானங்களை கடைகளுக்கு எடுத்துச் செல்லும் போக்குவரத்து ஒப்பந்தங்களில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்த முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தார். இந்த வழக்கில் அவரோடு முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட பலரும் குற்றம்சாட்டப்பட்டனர். கரூரைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளி ரமேஷ் ஆகியோரும் இதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

அவர்கள் கரூர் கும்பல் என்று அழைக்கப்படும் வட்டாரத்தில் இயங்கி டாஸ்மாக் நிர்வாகத்தில் தலையிட்டு வசூல் வேட்டை நடத்தியதாகக் கூறப்பட்டது.ஜூலை மாத இறுதியில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஏற்கனவே வேறு ஒரு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அதே நாளில் இந்த வழக்கிலும் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. கைதுக்குப் பிறகு கார்த்திக் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.

இதையும் படிங்க: நாளைக்கு சரக்கு கிடையாது! சென்னை முழுவதும் டாஸ்மாக், பார்கள் மூடல்!! மீறினால் கடும் நடவடிக்கை!

இந்த மனு நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது.விசாரணையின் போது காவல்துறை தரப்பில் வலுவான ஆட்சேபம் எழுப்பப்பட்டது. வழக்கு விசாரணை இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளதாகவும், கார்த்திக்குக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விட அதிக செல்வாக்கு மிக்க நபர் என்றும், அவருக்கு ஜாமின் வழங்கினால் விசாரணையில் தடங்கல் ஏற்படும் என்றும் காவல்துறை தரப்பு வாதிட்டது. இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

இதையும் படிங்க: அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை என்ன? ஆகஸ்ட் 28-ல் டாஸ்மாக் ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share