கோவில் நிதியில் வணிக வளாகம்? ... உடனே சுற்றறிக்கை அனுப்புங்க... அறநிலையத்துறைக்கு அதிரடி உத்தரவு...!
கோவில் நிலையில் வணிக வளாகம் கட்டக்கூடாது என சுற்றறிக்கை அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை பாரிமுனை பகுதியில் அமைந்துள்ள கந்தகோட்டம் முத்துக்குமாரசுவாமி திருக்கோயில், தமிழ்நாட்டின் சைவ சமய வரலாற்றில் ஒரு முக்கிய இடமாகத் திகழ்கிறது. 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கிய இக்கோயிலின் சிறப்பு, அதன் உற்சவர் சிலையின் அழகிலும், திருவிழாக்களின் உற்சாகத்திலும் மட்டுமல்லாமல், அதன் அளவில்லா நிலச் சொத்துக்களிலும் உள்ளது.
இந்தக் கோயில், சென்னை மத்திய ரயில்வே நிலையத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், நகரின் வளர்ச்சியின் மையத்தில் இருந்தாலும், அதன் நிலங்கள் புனிதமாகவே பாதுகாக்கப்பட வேண்டும் என்று சமய அறநிலையத் துறை சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால், இந்தப் புனித நிலங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் போன்றவை உருவாக வேண்டாம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கந்தகோட்டம் கோவில் நிலத்தில் வணிக வளாகம், குடியிருப்புகள் கட்ட தடை கோரி ஏ.பி. பழனி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு, வெறும் ஒரு கோயிலின் பிரச்சினையாக மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்து சமயச் சொத்துக்களின் பாதுகாப்புக்கான ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கோவில் நிதியில் வணிக வளாகம் கட்டக்கூடாது என தமிழக முழுவதும் அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அமைச்சர் துரைமுருகன் சொத்துக்குவிப்பு வழக்கு! எதுக்கு COURT மாறுச்சு? போலீசுக்கு சரமாரி ஹைகோர்ட் கேள்வி..!
அனைத்து கோவில்களுக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், நவம்பர் 22 ஆம் தேதிக்குள் பதிலளிக்க தமிழ்நாடு அரசு கோவில் நிர்வாகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தொடரும் சிக்கல்... ஹைகோர்ட்டில் இளையராஜா வழக்கு... வருமான விவரத்தை தாக்கல் செய்த சோனி நிறுவனம்...!