மதுரையில் பேரதிர்ச்சி; துப்பாக்கியால் சுட்டு 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை...!
மதுரையில், 10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில், 10ம் வகுப்பு மாணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை அருகே சம்பளக்குளத்தில் வசித்து வரும் வடிவேல் தனியார் வங்கி அதிகாரி, இவரது மனைவி கிருத்திகா வழக்கறிஞராக உள்ளார். இவர்களுடைய யுவன் என்ற 10 வயது மகன் மேலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 10 வகுப்பு படித்து வந்தார்.
துப்பாக்கி சுடும் வீரரான யுவன், பள்ளியில் படித்துக்கொண்டே தனியார் பயிற்சி மையத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தார். துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்று யுவன் பல்வேறு பதக்கங்களையும் வாரிக்குவித்துள்ளார். தற்போது யுவன் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்காக தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “அச்சச்சோ...நெஞ்சே பதறுதே...” - 2 பெண் குழந்தைகளை கிணற்றில் வீசி தாயும் தற்கொலை... ஷாக்கிங் காரணம்...!
இந்நிலையில் நேற்று சிவகங்கையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு பெற்றோர் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த யுவன் திடீரென்று பயிற்சிக்கு பயன்படுத்தும் ஒருவகை ‛ஏர்கன்' துப்பாக்கியை பயன்படுத்தி தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இரவில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டில் யுவன் தற்கொலை செய்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அறிந்து உடனடியாக விரைந்து வந்த புதுார் போலீசார், யுவனின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். யுவன் தற்கொலை செய்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றாலும், கடந்த சில நாட்களாகவே யுவன் பெற்றோர் உட்பட யாரிடம் சரியாக பேசாமல் இருந்து வந்ததாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
இதையும் படிங்க: நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்... தீபாவளி அன்று வெளியானது முக்கிய எச்சரிக்கை...!