கார் விபத்து ஒரு திட்டமிட்ட சதி..! தருமபுர ஆதீனம் பரபரப்பு குற்றச்சாட்டு..!
மதுரை ஆதீனத்தின் கார் விபத்துக்குள்ளானது திட்டமிட்ட சதி என தருமபுரம் ஆதீனம் குற்றம் சாட்டி உள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே மதுரை ஆதீனத்தின் வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. காரில் பயணம் செய்த மதுரை ஆதீனம் உட்பட யாருக்கும் அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. சைவ மாநாட்டில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து விபத்துக்குள்ளான காருடன் மதுரை ஆதீனம் சென்னைக்கு புறப்பட்டார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் கார் விபத்து திட்டமிட்ட சதி என தருமபுர ஆதீனம் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. இந்த விபத்தில் கார் சேதமானாலும் இறையருளால் மதுரை ஆதீனம் உயிர் தப்பியதாகவும் அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மதுரை ஆதீனத்தின் மீது மோதிய கார் நம்பர் பிளேட் இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கார் ரேசிங்கின் போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்.. தற்போதைய நிலைமை..?
இதையும் படிங்க: வாகன ஓட்டிகளுக்கு எமனாகும் தெரு நாய்கள்.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய CM மு.க.ஸ்டாலின்!!