×
 

சட்டவிரோத கட்டிடங்கள்... சாட்டையை சுழற்றிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை... பரபரப்பு உத்தரவு...!

கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை மீறிய சட்டவிரோத கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை  அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும்.- நீதிபதிகள் கருத்து.

கன்னியாகுமரியை சேர்ந்த சாமுவேல்  என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி நகராட்சியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் மற்றும் கட்டிட அனுமதி விதிகளுக்கு மாறாக பல கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு  நீதிபதிகள் சதீஷ் குமார், ஜோதிராமன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தின் உதவி இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட  அறிக்கையில், கன்னியாகுமரி  பகுதியில் விதிகளுக்கு புறம்பாக கட்டப்பட்ட 63 சட்டவிரோத கட்டிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் விதிகளை மீறிய 6 கட்டிடங்களுக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. 

மேலும், நகராட்சி அதிகாரிகள் தரப்பில் விதிமீறல் கட்டிட உரிமையாளர்களுக்கு  நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என கூறப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சட்டவிரோத கட்டிடங்கள் மீதான நடவடிக்கையை  அதிகாரிகள் விரைந்து எடுக்க வேண்டும். பாதிப்புக்குள்ளான தனியார் கட்டிட உரிமையாளர்கள் தங்களது கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். 

இதையும் படிங்க: கள் இறக்கிய விவசாயி மீது துப்பாக்கி சூடு..! தென்காசி போலீஸ் விசாரிக்கக் கூடாது..! அதிரடி தடை..!

அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆராய்ந்து மூன்று மாத காலத்திற்குள் தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: காட்டுத்தீ விவகாரம்..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க மதுரைக் கிளை உத்தரவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share