×
 

“பொதுநல மனு என்ற பெயரில்...” - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு....!!

பொதுநல மனு என்ற பெயரில் வரும் வழக்குகள் அதிகமாக தனிநபர் ஆதாயம் சார்ந்த உள்ளது.

பொதுநல மனு என்ற பெயரில் வரும் வழக்குகள் அதிகமாக தனிநபர் ஆதாயம் சார்ந்த உள்ளது. இது போன்ற தேவையற்ற பொது நல  மனுக்கள் கட்டுப்படுத்த வேண்டும். உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தென்காசி மாவட்டம் திப்பணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், திப்பணம்பட்டி கிராமத்தில் தனியார் வீட்டு மனை லே-அவுட் உருவாக்கப்பட்டது. இதற்காக அந்த இடத்தில் இருந்த 74 பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. மரம் வெட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டபோது, வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் பதிலாக 10 மரக்கன்றுகள் வீதம் நட்டு பராமரிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால், லே-அவுட் மேம்பாட்டாளர் இந்த நிபந்தனையை முறையாகப் பின்பற்றவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள், சதீஷ் குமார், ஜோதிராமன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, மனுதாரர் சம்பந்தப்பட்ட ஊராட்சியின் முன்னாள் தலைவர் என்பது தெரியவந்தது. இதன் மூலம் இந்த மனு பொதுநலன் சார்ந்தது அல்ல, மாறாக தனிப்பட்ட உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டது என்பது தெளிவாகிறது. ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுபவர்களை ஏதேனும் ஒரு வகையில் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காகவே இது போன்ற மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. 

இதையும் படிங்க: மதுரையில் ஸ்ட்ராங் ரூமில் செயலிழந்த சிசிடிவி..! பதறிய வேட்பாளர்கள்..!!

பொதுநல மனு என்ற பெயரில் வரும் இது போன்ற தேவையற்ற மனுக்கள் கட்டுப்படுத்த வேண்டும். இந்த வழக்கில் பொதுநலன் எதுவும் இல்லை , முழுவதும் தனிப்பட்ட நலன் சார்ந்ததது எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: “வராரு வாராரு அழகர் வாராரு...” - மதுரைக்குள் ஹீரோ என்ட்ரி கொடுத்த கள்ளழகர்... விண்ணை அதிர வைத்த “கோவிந்தா” முழக்கம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share