#BREAKING வெளியேறுங்கள்... மதுரை மக்களுக்கு இடியாய் வந்த செய்தி... நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு...!
அடுத்த 2 வாரத்திற்குள் மதுரை மாவட்ட ஆட்சியர் தகுதி உள்ள நபர்களுக்கு மறுவாழ்வு நிலம் வழங்க வேண்டும் என நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் நில கையகப்படுத்தப்பட்ட விவாகரத்தில்
சின்ன உடைப்பு கிராம மக்கள் 2 வாரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
மதுரை அருகே உள்ள சின்ன உடைப்பு கிராமத்தை சேர்ந்த மலைராஜன், பெரியசாமி, அழகர் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டோர் மதுரை விமான நிலைய விரிவாகத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அதில் சின்ன உடைப்பு கிராமத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருவதாகவும் மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக 2009ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதற்கான இழப்பீடு முடிவு செய்யப்பட்டு அனைத்து நபர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது .
இதையும் படிங்க: தமிழகம் வரும் பிரதமர் மோடி... ஏற்பாடுகள் மும்முரம்..! அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை..!!
ஆனால் மறு குடி அமர்த்துதல் மற்றும் மறுவாழ்வு தொடர்பாக எவ்விதமான முறையான திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றும் தொழில் பயன்பாட்டிற்காக நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் பொழுது மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்துதல் போன்றவற்றை செய்து தர வேண்டும் என்றும் 2013ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதியை தங்கள் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனாலும் இப்பகுதி மக்களை வெளியேற்றும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதாகவும், எனவே மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் வசதிகளை செய்து தராமல் நிலம் கையகப்படுத்துதல் விதிகளை அமல்படுத்துவது செல்லாது என உத்தரவிடக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையாக படுத்தப்பட்ட விவாகரத்தில் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது மட்டுமல்லாமல் மாற்று இடம் வழங்க வேண்டும் என்ற மனுக்களை இன்று விசாரணை செய்த நீதிபதிகள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வு மாற்று இடம் வழங்குவது குறித்து அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை ஏற்கனவே வழங்கியிருந்தனர் தமிழக அரசு தகுதி உடையோருக்கு நிலம் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது அதன் அடிப்படையில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிலேயே முதல் முறை...!! மதுரையில் கணினி மேம்பாட்டு மையம் திறப்பு... மு.க.ஸ்டாலின் அதிரடி...!