“சீல் வைத்தால் மட்டும் போதாது”... விதி மீறிய கட்டிடங்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு உத்தரவு...!
விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மதுரையில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த கோரி வழக்கு. மதுரை மாநகராட்சி ஆணையாளர் நிலை அறிக்கை தாக்கல். நிலை அறிக்கையில் பிரபல மருத்துவமனைகள்,வணிக வளாகங்கள் தங்கும் விடுதிகள் முறையான அனுமதி பெறாமல் செயல்படுவதாக அதிர்ச்சி தகவல்
மதுரை தமிழகத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது இந்நிலையில் மதுரையில் வளர்ச்சியில் கட்டுமானங்கள் முக்கியத்துவம் பெறுகிறது. இதனை பயன்படுத்தி கடந்த 10 ஆண்டுகளாக விதிமுறைகளுக்கு முரணாக வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள், திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் வணிக நோக்கத்திற்காக கட்டப்படும் கட்டுமானங்கள் தமிழக அரசின் விதிகளுக்கு முரணாக கட்டுவதால் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்த கட்டுமானங்கள் கட்டி முடிக்கப்பட்டு கட்டுமான நிறைவு சான்று வழங்கும்போது மாநகராட்சி அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்யாமல் கட்டுமான நிறைவு சான்றுகளும் வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாக்ஸ் சிலிகா கூட்டமைப்பில் இணைந்தாச்சு!! பொருளாதார பாதுகாப்பு உறுதி! இந்தியா - அமெரிக்கா பிரதிநிதிகள் கையெழுத்து!
இது போல் மதுரையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் விதிமுறைக்கு முரணாகவும் அரசின் அனுமதி இல்லாமலும் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே அரசின் விதிகளுக்கு எதிராக மற்றும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் இதற்கு உறுதுணையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.ஜெயச்சந்திரன் கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மதுரை மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன் நிலை அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில் விஷால் டி மால் வணிக வளாகம், சரவணா மருத்துவமனை, ஹோட்டல் கௌரி கிருஷ்ணா,தேவகி மருத்துவமனை, விக்ரம் மருத்துவமனை, ஜேசி.ரெசிடென்சி, ஆசிர்வாத் மருத்துவமனை என மதுரை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்திருந்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள் மாநகராட்சியில் மருத்துவமனை ஹோட்டல் உள்ளிட்ட 32 வணிக நிறுவனங்கள் முறையான அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது, என கண்டறியப்பட்டு நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வந்த பின் 21 நிறுவனங்களுக்கு மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை எனவே விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை விரைந்து இடித்து அப்புறப்படுத்தி அதன் நிலை அறிக்கை ஏப்ரல் 22ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக... மறுபடியும் அம்பலமாகிருக்கு... TVK அருண்ராஜ் விமர்சனம்..!!