×
 

இனி கைதிகளுக்கு தண்டனை வழங்கினால் இது கட்டாயம்...! - சிறை துறைக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு...!

இனி சிறையில் உள்ள கைதிகளுக்கு சிறு  தண்டனை வழங்கும் பொழுது, கண்டிப்பாக எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை சிறை கைதிகளுக்கு எழுத்துப்பூர்வ வழங்க வேண்டும்.

சிறை துறை சார்பில் கைதிகளுக்கு சிறை  தண்டனை வழங்கும் பொழுது, கண்டிப்பாக எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை சிறை கைதிகளுக்கு எழுத்துப்பூர்வமாக, வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கிளை உத்தரவு.

மதுரையை சேர்ந்த தனலட்சுமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், திருச்சி சிறையில் விசாரணைக் கைதியாக இருக்கும் துரைப்பாண்டி என்ற நபரை இந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும். மேலும்,  விசாரணைக் கைதிக்கு போதுமான சிகிச்சை, சட்ட உதவி வழங்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள்  சி.வி. கார்த்திகேயன் ,ஆர்.விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது அனைத்து வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மனுதாரரின் கணவர் தனிமைச் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுப்பட்டது.

இதையும் படிங்க: ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாய்; வரலாற்று சாதனை படைத்த பத்திரப்பதிவு துறை...! 

திருச்சி  சிறையில் உள்ள விசாரணைக் கைதி துரைப்பாண்டியும் மற்றொரு கைதி கதிரேசனும் சிறைச்சாலையில் உள்ள தொலைபேசியில் இருந்து, ஒரே நேரத்தில் பேசினார் என்பது குற்றச்சாட்டு. இந்த செயல்  சிறைச்சாலை கையேட்டை மீறுவதால், இவர் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என தெரிய வந்தது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட நீதிபதி ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன் அடிப்படையில்,  அவர்கள் அறிக்கை சமர்ப்பித்தனர். இது தனிமைச் சிறை இல்லை என்றாலும், கைதிகள் ஒருவருக்கொருவர் சுயாதீனமாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.எந்த நேரத்திலும் அவர்கள் அறையை விட்டு வெளியே வர முடியாது.

அவர்கள் அந்த குறிப்பிட்ட தொகுதியில் வைக்கப்பட்டுள்ள காலத்தில் மற்ற கைதிகளைச் சந்திக்க வாய்ப்பில்லை. என  அறிக்கையில் கூறியிருந்தார். இதை தொடர்ந்து சிறைத்துறை தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் கலந்து ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவின்படி, வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் சிறையில் உள்ள  கைதிகள், சிறையில் இருக்கும் பொழுது ஒழுங்கீனமாக  சிறை விதிகளுக்கு எதிராக நடக்கும் பொழுது சிறைத்துறை சார்பில் சிறு  தண்டனை வழங்கப்படுகிறது.  தனிமை சிறை உள்ளிட்ட தண்டனை வழங்கப்படுகிறது. எந்த வித காரணமும்தெரிவிக்காமல், சிறை நிர்வாகம் , கைதிகளுக்கு சிறு தண்டனை வழங்கி வந்து உள்ளது.

இனி மேல் சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிறு  தண்டனை வழங்கும் பொழுது, கண்டிப்பாக 
எதற்காக இந்த தண்டனை வழங்கப்படுகிறது என்ற விவரங்களை சிறை கைதிகளுக்கு எழுத்துப்பூர்வ ஆவணமாக சிறை நிர்வாகம் வழங்க வேண்டும். இது அவருடைய பதிவேடுகளிலும் பதிவு செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை சிறை துறை வகுத்துள்ளது என சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு சிறை துறைக்கு  பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற ஆவணங்களை சிறைக்கதிகளுக்கு வழங்கினால்தான், சிறை நிர்வாகம் அவர்களுக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து மத்திய மாவட்ட கிளை சிறைகளுக்கும் சிறைதுறை  தலைவர் சுற்றறிக்கையாக அனுப்ப வேண்டும்.அனைத்து சிறைகளிலும் இதை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.
 

இதையும் படிங்க: மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027: ஜாதி கணக்கெடுப்பும் கட்டாயம்.. மக்களவையில் மத்திய இணை அமைச்சர் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share