அடிதூள்...!! பத்திரப்பதிவு துறை வரலாற்றிலேயே முதல்முறை... ஒரே நாளில் ரூ.302 கோடியை தட்டித்தூக்கிய தமிழக அரசு...!
டிசம்பர் 1ம் தேதியான இன்று தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் சுப முகூர்த்த நாள் என்பதால் மக்கள் அதிக அளவில் சொத்துப் பத்திரங்களை பதிவு செய்துள்ளனர்.
இன்று ஒரே நாளில் ரூ.302 கோடி வருவாயை ஈட்டி, தமிழ்நாட்டின் பதிவுத் துறை வரலாற்றில் ஒரு அசாதாரண சாதனையை படைத்துள்ளது. இது மாநில அரசின் மிக முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றான பதிவுத் துறையின் திறமையையும், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சியையும் பிரதிபலிக்கிறது.
சாதனையின் பின்னணி: சாத்தியமானது எப்படி?
தமிழ்நாடு பதிவுத் துறை, முதன்மையாக சொத்து பதிவுகள், ஸ்டாம்ப் டூட்டி, மற்றும் பிற ஆவணங்களின் பதிவு மூலம் வருவாய் ஈட்டுகிறது. 2024-25 நிதியாண்டில், இத்துறை மொத்தம் ரூ.21,968.24 கோடி வருவாயை உருவாக்கியது, இதில் சொத்து பதிவுகள் 95% பங்களிப்பை அளித்தன. இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில்ரூ.14,525 கோடி வருவாய் ஈடப்பட்டது. இது முந்தைய ஆண்டின் இதே காலத்தில் ரூ.12,634 கோடியை விட ரூ.1,891 கோடி அதிகமாகும்.
இதையும் படிங்க: பங்குச் சந்தை கட்டுப்பாடுகளில் பெரிய மாற்றம்? SEBI தலைவர் துஹின் காந்தா பாண்டே தகவல்!
2024 நவம்பரில், மாநிலம் முழுவதும் சொத்து வழிகாட்டி மதிப்புகள் திருத்தப்பட்டன. இது பதிவு கட்டணங்களை உயர்த்தியது, இதனால் ஏப்ரல்-அக்டோபர் காலத்தில் மட்டும் ரூ.1,222 கோடி கூடுதல் வருவாய் சேர்க்கப்பட்டது. 2023-24 இல் இதே காலத்தில் ரூ.10,511 கோடி இருந்தது, 2024-25 இல் ரூ.11,733 கோடியாக உயர காரணமாக அமைந்தது.
ஒரே நாளில் புதிய உச்சம்:
டிசம்பர் 1ம் தேதியான இன்று தமிழ் மாதமான கார்த்திகை மாதத்தில் சுப முகூர்த்த நாள் என்பதால் மக்கள் அதிக அளவில் சொத்துப் பத்திரங்களை பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக இன்று ஒரே நாளில் மட்டும் 20,000-க்கும் மேற்பட்ட சொத்து பதிவுகள் நடந்துள்ளன. இதற்கு முன், நவம்பர் மாதம் ரூ.19,84.02 கோடி மாத வருவாய் சாதனை படைக்கப்பட்டது, அதேபோல் டிசம்பர் 5 அன்று ரூ.238.15 கோடிக்கு பத்திரப்பதிவு செய்யப்பட்டது ஒரே நாளில் நிகழ்ந்தப்பட்ட உச்சக்கட்ட சாதனையாக இருந்தது.
டோக்கன் அமைப்பு, ஆன்லைன் பதிவு வசதிகள், மற்றும் ஆவண சமர்ப்பிப்புக்கு அளிக்கப்படும் சலுகைகளும் ஒரே நாளில் பத்திரப்பதிவு புதிய உச்சத்தை அடைய முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. 2025-26 இல், தமிழ்நாடு 'குளோபல் சிட்டி' போன்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது, இது ரியல் எஸ்டேட் செயல்பாட்டை மேலும் அதிகரிக்கும். பதிவுத் துறை, டிஜிட்டல் மேம்பாடுகள் மூலம் இன்னும் ரூ.2 லட்சம் கோடி வருவாயை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த சாதனை, மாநிலத்தின் நிதி சீர்திருத்தங்களின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது, மேலும் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொருளாதார தாக்கம்:
ரியல் எஸ்டேட் துறை, மாநில GDP-யின் 8-10% பங்களிக்கிறது, மேலும் இது வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சென்னை மண்டலம் ரூ.89 கோடி, கோயம்புத்தூர் ரூ.46 கோடி, செங்கல்பட்டு ரூ.30 கோடி போன்றவை இந்த வருவாயின் முக்கிய பங்களிப்பாளர்கள். வட சென்னையில் காணப்படும் எதிர்பாராத வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மற்றும் மலிவு விலை வீடுகளின் காரணமாக இருக்கலாம்.
2025-26 நிதியாண்டு பட்ஜெட்டில், மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,20,895 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது, இதில் பதிவுத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மொத்த வருவாய் ரூ.3,31,569 கோடியாக உள்ளது, இது மாநிலத்தின் சொந்த வருவாய்கள் 75.3% ஆக உள்ளன. மாநில அரசு இந்த சாதனையை "தமிழ்நாட்டின் பொருளாதார உயர்வின் அடையாளம்" எனக்குறிப்பிட்டாலும், சில விமர்சகர்கள், சொத்து வழிகாட்டி மதிப்புகள் உயர்ந்தது காரணமாக சொத்து வாங்குபவர்களுக்கு ஏற்படும் சுமை குறித்து குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Alert...! Alert...!! - “நாளை வரை நிற்காது போலயே” - சென்னைக்கு வந்தது அடுத்த ஆபத்து...!