இதை அனுமதிக்கவே முடியாது... அதிகாரிகளை லெப்ட், ரைட் வாங்கிய நீதிபதிகள்... முக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு...!
அரும்பூர் கண்மாய் நீர் நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டும் கட்டுமான பணிக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
நீர்நிலைப் பகுதியில் எவ்வித கட்டுமானத்தையும் அனுமதிக்க கூடாது என உத்தரவிட்டும் அரசுஅதிகாரிகள் அதனை பின்பற்றுவது இல்லையே ஏன்?- நீதிபதிகள் கேள்வி.
கண்மாய் நீர்நிலை பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்க தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரே உள்ள கால்வாய் பாலம் காட்டுவதாக தனியார் ஆக்கிரமித்து வருகின்றார் மாநகராட்சி ஒரு நடவடிக்கை இல்லை- நீதிபதிகள் வேதனை.
ராமநாதபுரம் மாவட்டம் அரும்பூர் பகுதியைச் சேர்ந்த முத்து பெருமாள் தாக்கல் செய்த மனு. ராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கள் பகுதியில் அரும்பூர் பெரிய கண்மாய் உள்ளது இந்த கன்மாய் வைகை ஆற்றில் இருந்து வரும் நீரினை மூலாதாரமாகக் கொண்டுள்ளது இந்த கண்மாய் மூலம் 460 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைந்து வருகின்றன.
இதையும் படிங்க: “ஓடுகாலிகளால் ஒருபோதும் அதிமுக அழியாது...” - இடைத்தேர்தலில் தவெகவுக்கு காத்திருக்கும் ஆபத்து... கொளுத்திப்போட்ட ஆர்.பி.உதயகுமார்...!
இந்நிலையில் அரும்பூர் கண்மாய் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால் கண்மாயின் நீர்நிலைப் பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றது மேலும் நீரின் போக்கை மாற்று வகையில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது எனவே ஏற்கனவே உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற உத்தரவுகளின் படியில் நீர் நிலையில் எவ்வித ஆக்கிரமிப்பும் செய்யக்கூடாது என்ற உத்தரவு உள்ள நிலையில் அரசே இதுபோன்று நீர்நிலை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டுவது சட்டவிரோதம் எனவே இதை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனோ தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் அமரவும் முன் விசாரணைக்கு வந்தது . விசாரணையின் போது நீதிபதிகள் நாங்கள் நீர்நிலைகளை ஆக்கிரமிக்க கூடாது என்று கடந்த மூன்று வருடங்களாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பித்து வருகின்றோம் ஆனால் இதனை அரசு அதிகாரிகள் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் தொடர்ந்து நீர்நிலை ஆக்கிரமிப்பிற்கு துணை போகின்றனர்.
இது மிகவும் வேதனையாக உள்ளது. எவ்வாறு இதுபோன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்கிறார்கள் நீர்நிலைகளில் எந்த ஒரு கட்டுமானத்தையும் கண்டிப்பாக அனுமதிக்கவே முடியாது. அதேபோல் மதுரை மாட்டுத்தாவணி எதிரே செல்லக்கூடிய கால்வாயில் பாலங்கள் கட்டுமான பணிகள் என்ற பெயரில் கால்வாய் முழுமையாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது தினந்தோறும் அதிகாரிகள் அதில் பார்த்துவிட்டு தான் செல்கிறார்கள் ஆனால் இதை எவ்வாறு அனுமதிக்கிறார்கள் என்று தெரியவில்லை மிகவும் வேதனையாக உள்ளது.என்றனர்.
அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாட்டுத்தாவணி எதிரே கால்வாய் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து நீதிபதிகள் அரும்பூர் கண்மாய் நீர் நிலை பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேருந்து நிழற்குடை கட்டுமான பணிக்கு தடை விதித்தனர்.
மேலும் மனு குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: AI தெரிஞ்சா தான் கட்சிப்பதவியா..? எடப்பாடி என்ன சொன்னாரு..? அதிமுக விளக்கம்..!