தமிழகத்திற்குள் அடியெடுத்து வைத்த போர்... 90 சதவீதம் டீ கடை, ஹோட்டல்களை மூடும் அபாயம் ...!
தற்போது வர்த்தக சிலிண்டர் நிறுத்தும் அறிவிப்பால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிப்பதாகவும் இதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.
திருப்பூரில் வணிக சிலிண்டர் தட்டுப்பாடு 2 நாட்கள் மட்டுமே ஓட்டல்கள் தாக்கு பிடிக்கும். உணவகங்கள் மூடப்படும் பட்சத்தில் பத்தாயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் என ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்டு வரும் போர் காரணமாக, உலக நாடுகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக மக்கள் தொகை அதிகம் கொண்ட இந்தியாவில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. சிலிண்டர்களின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. உணவகங்கள் தேநீர் கடை போன்ற வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வர்த்தக சிலிண்டர்கள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாட்டில் 90 சதவீதம் தேனீர் கடை, உணவகங்கள் மூடும் அபாயம் இருப்பதாகவும் ஏற்கனவே அவ்வப்போது வர்த்தக சிலிண்டர் விலை உயர்வால் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் தற்போது வர்த்தக சிலிண்டர் நிறுத்தும் அறிவிப்பால் என்ன செய்வதென்றே தெரியாமல் தவிப்பதாகவும் இதற்கு அரசு தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்க செயலாளர் நாகராஜன் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக கடையை அடைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாநகரை பொருத்தவரை வணிக சிலிண்டரை பயன்படுத்தும், பெரிய ஹோட்டல்கள் நடுத்தர ஹோட்டல்கள் சிறிய ஹோட்டல் மற்றும் பேக்கரிகள் என 3000 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் தினசரி 2 லட்சம் பேர் உணவகத்தை நம்பி உள்ளனர். இதில் 50 ஆயிரம் பேர் முழுமையாக ஓட்டல்களை மட்டும் நம்பி உள்ளனர். அடுத்த 2 நாட்கள் மட்டுமே உணவகத்தை நடத்த முடியும் நிலை உள்ளது. அந்த அளவிற்கு தான் சிலிண்டர்கள் ஸ்டாக் உள்ளது. விறகு அடுப்பு வைத்து செய்ய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி உள்ளிட்ட பிரச்சனைகள் உள்ளது.
இதையும் படிங்க: கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!
1500 சிலிண்டர்கள் தினசரி தேவைப்படும் நிலையில், தற்பொழுது வணிக சிலிண்டர்கள் சீராக கிடைத்தாலும் எப்பொழுது வேண்டுமானாலும் நிறுத்தப்படும் என எங்களது ஏஜென்ட்கள் தெரிவித்துள்ளனர். எனவே வரும் நாட்களில் தட்டுப்பாடு காரணமாக அனைத்து வகை உணவுகளும் செய்ய முடியாது. தக்காளி சாதம் போன்ற கலவை சாதம் உணவுகள் தான் கிடைக்கும். அனைத்து உணவகங்களும் கேஸ் அடுப்பு வைத்து அதற்கான வசதிகள் செய்துள்ள நிலையில் விறகு அடுப்பு மூலம் அனைத்து வகையான உணவுகள் செய்ய முடியாது. ஒரே சமயத்தில் பிறகு அடுப்புக்கும், மின்சார அடுப்பிற்கும் மாற்றவும் முடியாது ஏனெனில் அதற்கான கட்டமைப்புகள் எந்த உணவகங்களிலும் அமைக்கப்படவில்லை.
சூழ்நிலைகள் இவ்வாறு இருக்கும் பட்சத்தில் வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக அடுத்து என்ன முடிவு செய்யலாம் என்பது குறித்து அனைத்து ஹோட்டல் உரிமையாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளதாகவும், இந்த கேஸ் தட்டுப்பாடு காரணமாக எந்த உணவகங்களிலும் இதனை பயன்படுத்தி எந்தவித விலையற்றமும் இருக்காது என உறுதி அளிப்பது ஆகவும் தெரிவித்துள்ளார். கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டு உணவகங்கள் மூடும் நிலை ஏற்பட்டால் இதனை சார்ந்து பணியாற்றி வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நிச்சயம் பாதிக்கக்கூடும் எனவும், ஹோட்டல்கள் மூடப்படும் பட்சத்தில் அவர்களுக்கு சம்பளம் வழங்குவது என்பது இயலாத காரியம் எனவே மத்திய அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு வணிக சிலிண்டர்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இயங்கி வரும் உணவகங்களில் அமெரிக்கா ஈரான் போரால் வணிக காஸ் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக உணவகங்களில் கியாஸ் அடுப்பை பயன்படுத்தி இட்லி, தோசை, பூரி, பால் மற்றும் சைனீஸ் வகையான உணவுகள் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனையை நிறுத்த ஓட்டல் உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளனர். கடந்த 4 நாட்களாக வணிக காஸ் சிலிண்டர்கள் சரி வர விநியோகம் செய்யப்படாததால் உணவுக உரிமையாளர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டத்திலும் தினமும் 2000 வணிக பயன்பாட்டிற்கு விநியோகிக்கப்படும் கேஸ் சிலிண்டர்கள் தற்பொழுது வரத்து குறைவால் 200 விநியோகம் செய்யப்படும் நிலைக்கு வந்திருக்கிறது. இதனால் பல ஹோட்டல்கள் உணவு தயாரிக்க முடியாமல் அடைக்கப்பட்டிருக்கும் நிலையும் தொடர்கிறது. இந்த சூழ்நிலையால் வழிக நிறுவனங்கள் ஹோட்டல்களில் பணியாற்றும் பல ஊழியர்கள் தங்களது வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கேஸ் சிலிண்டர் பயன்பாடு முற்றிலுமாக தடைபட்டால் எந்த ஒரு சமையலும் செய்ய முடியாது. அது தவிர்த்து பல்வேறு மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் மக்களும் உரிய நேரத்திற்கு உணவு சாப்பிட முடியாத அவலமடையும் நிலை ஏற்படும். விறகுகளை மீண்டும் பயன்படுத்தலாம் என்று யோசனை செய்தால் கூட அதன் விலையும் அதிகளவில் ஏற்றப்பட்டு இருப்பதால் ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் நடத்திவரும் உரிமையாளர்கள் பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
வணிக சிலிண்டரை சப்ளை செய்யாவிட்டால் மதுரையில் 500க்கும் மேற்பட்ட ஓட்டல்கள், ஆயிரக்கணக்கான சிறிய டீ கடைகள் மற்றும் சாலையோர கடைகள் இரண்டு நாட்களுக்கு பின் மூட வேண்டிய நிலை ஏற்படும் என அப்பகுதி கடைக்காரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை இன்னும் மூன்று தினங்களுக்கு விநியோகம் செய்யும் அளவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் விநியோகிக்கப்படும் வர்த்தக சிலிண்டர்கள் கையிருப்பு உள்ளதாகவும் அதற்குப் பிறகு மருத்துவமனை பள்ளி கல்லூரி விடுதிகள் தவிர்த்து மற்ற வர்த்தக சிலிண்டர்கள் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு சப்ளை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அவதூறு பேச்சு, அபாண்ட பழிதான் திமுகவுக்கு வாடிக்கை..! அண்ணாமலை குற்றச்சாட்டு..!!