சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை... நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!
வன்கொடுமை தடுப்பு சட்டப்படி சாட்சிகளை பாதுகாக்கவும் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் மனுதாரர் தரப்பில் வாதம்.
தூய்மை பணியாளரான சசிகலாவுக்கு நடந்த சாதிய வன்கொடுமை வழக்கில், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட கோரி வழக்கு. சாதிய வன்கொடுமை வழக்கில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. வழக்கின் தற்போதைய நிலை என்ன? நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு.
வன்கொடுமை தடுப்பு சட்டப்படி சாட்சிகளை பாதுகாக்கவும் சிசிடிவி காட்சிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் மனுதாரர் தரப்பில் வாதம்.
மதுரை மாவட்டம் கம்பூர் கிராமத்தை சேர்ந்த தூய்மை பணியாளர் சசிகலா தாக்கல் செய்த வழக்கு. நான் மதுரை மாவட்டம்கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பூர் ஊராட்சியில் தூய்மை பணியாளராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றி வரும் நிலையில் இதே கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலர் ரூபா சாதியை சொல்லி திட்டியதாகவும், மேலும் அலுவலகத்தில் உள்ள டம்ளரை பயன்படுத்தாமல் மாற்று பேப்பர் டம்ளரை பயன்படுத்துமாறும் மேலும் சாதி ரீதியாக துன்புறுத்தியதாக கூறி மாவட்ட ஆட்சியர் மற்றும் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் செயலர் ரூபா மீது பிறகு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: கந்துவட்டி தடை சட்ட பலகைகள் எங்கே? தமிழக டிஜிபி-க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
இதனிடையே வன்கொடுமை வழக்கை வாபஸ்பெறக் கோரி சசிகலாவை மிரட்டியதால் மனமுடைந்த சசிகலா தற்கொலைக்கு முயன்று தற்போது மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்நிலையில் எனது புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வருகிறது எனவே எனது புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் நேர்மையான காவல்துறை அதிகாரி வைத்து விசாரணை நடத்த வேண்டும் சம்பவத்தைக் கண்ட சாட்சிகளுக்குத் தேவையான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; சிசிடிவி காட்சிகள் மற்றும் வருகைப் பதிவேடு தொடர்பான பிற ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி விஜயகுமார் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் இந்த வழக்கில் விசாரணையை முடித்து குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்ய இடைக்கால தடை விதித்த நீதிபதி இந்த வழக்கில் காவல்துறை எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளார்.
இதையும் படிங்க: பஞ்சாயத்தில் எதிர்த்து பேசிய மகன்... ஊர் மக்கள் முன்னால் பட்டியலின தாய்க்கு நேர்ந்த கொடூரம்... பறந்தது அதிரடி உத்தரவு...!