பஞ்சாயத்தில் எதிர்த்து பேசிய மகன்... ஊர் மக்கள் முன்னால் பட்டியலின தாய்க்கு நேர்ந்த கொடூரம்... பறந்தது அதிரடி உத்தரவு...!
ஊர் கூட்டத்தில் எதிர்த்து பேசிய இளைஞரை ஊர் பஞ்சாயத்தினர் முன் காலில் விழ வைத்த கொடூரம். மகனுக்காக தாய்யும் ஊர் கூட்டத்தில் விழுந்து கும்பிட்டு விழுந்த கொடுமை.
ஊர் விலகல் செய்து வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊர் விலகலை ரத்து செய்ய கோரி வழக்கு. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர், காவல் துறை கண்காணிப்பாளர் ஊர் கூட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. இறந்தவர்கள் வீடுகள் மற்றும் 100 நாள் வேலைக்கு செல்வதற்கு கூட அனுமதி மறுக்கப்படுவதாக மனுதாரர் தரப்பில் வாதம்.
புதுக்கோட்டை மாவட்டம் கோலேந்திரம் கிராமத்தைச் சார்ந்த செல்வா என்பவர் தாக்கல் செய்த வழக்கு. நாங்கள் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த கிறிஸ்தவர்கள் எனது அம்மா ஞான ஜோதி மற்றும் எனது சகோதரருடன் இந்த கிராமத்தில் வசித்து வருகின்றோம்.
எங்கள் ஊரில் திருவிழா சம்பந்தமான ஊர் கூட்டம் நடைபெற்ற போது ஊர் பெரியவர்களை எதிர்த்து பேசியதாக கூறி ஊர் கூட்டம் போட்டு எனது அம்மாவை அழைத்துச் சென்று உங்கள் குடும்பத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எதற்கு என்று கேட்டதற்கு ஊர் கூட்டத்தை மீறி எதிர்த்து பேசியதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது 30 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட முடியாது வசதி இல்லை என ஊர் கூட்டத்தில் தெரிவித்தோம்.
இதையும் படிங்க: கொலையா? ஆணவப் படுகொலையா? மதுரையில் மாணவன் மரணம் குறித்து கொந்தளித்த மக்கள்! போலீஸுடன் தள்ளுமுள்ளு!
இதனால் எனது தாயாரை என்னையும் ஊர் கூட்டத்தில் ஊரார் முன்னிலையில் கும்பிட்டு வில (ஊரார் காலில்) சொன்னார்கள் வேறு வழியின்றி மூன்று முறை கும்பிட்டு விழுந்த பின்பு பத்தாயிரமாக அபராதம் குறைக்கப்பட்டதாக தெரிவித்தனர் எங்களால் பத்தாயிரம் ரூபாய் கட்ட முடியவில்லை இதனால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து ஊரார் யாரும் எங்களோடு எந்த தொடர்பு வைக்கக் கூடாது என அறிவித்தனர்.
மேலும் எங்களுக்கு ஆதரவளித்த 25 குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர் இதுகுறித்து கடந்த ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்தால் புகாரை முறையாக விசாரிக்காமல் போலீசார் எங்களை மிரட்டி இழிவாக பேசுகின்றனர்.
எனவே எங்களை ஊர் நீக்கம் செய்து வைத்துள்ள கிராம தலையரி புதுமை ராஜ், அடைக்கலம், அமிர்தாஸ், பிரவீன் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து ஊர் நீக்கம் செய்ததை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி முருகன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஊர் நீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ள குடும்பத்தினர் தற்போது 100 நாள் வேலை திட்டத்திலும் பங்கேற்க அனுமதிக்க மறுக்கப்படுகிறது இதற்கு வருவாய் துறை காவல் துறையினரும் துணை நிற்கின்றனர் எனவே இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டார்.
அரசு தரப்பில் மனு குறித்து பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் ஊர் நீக்கம் செயலில் ஈடுபட்ட நபர்கள் அனைவரும் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை பொத்தி வைத்தார்.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தியில் மதுரைக்கு வந்த புதிய வரவு! மீனாட்சி அம்மன் கோவிலில் ‘துர்கா’ யானை!