×
 

இந்த கொடுமைக்கு ஒரு முடிவில்லையா?... குடிநீர் தொட்டியில் மலம்... மதுரையில் பெரும் பரபரப்பு...!

சோழவந்தான் அருகே மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்ததாக புகார்  எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியில்  மனிதக் கழிவு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அமைந்துள்ளது கருப்பட்டி ஊராட்சி.  இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அம்மச்சியாபுரம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

 இந்நிலையில் கடந்த இரண்டு தினங்களாக அங்கு வரும் குடிநீர் குழாயில் வரும் நீர் துர்நாற்றத்துடன் வந்துள்ளது. இதனால் அவதி அடைந்த பகுதி மக்கள் இன்று அங்குள்ள மேல்நிலை நீர் தேக்க குடிநீர் தொட்டியை பரிசோதித்த போது அதில் மனித கழிவு கிடந்தது தெரிய வந்தது. 

இதையும் படிங்க: அடச்சீ... பெண்களை படம் பிடித்து ரசித்த மின்வாரிய அலுவலர்... கையும் களவுமாக மாட்டிய சம்பவம்...!

 அதனை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தரப்பட்டது மேலும் அந்த நீர் தேக்க தொட்டியின் மூலம் குடிநீரை பிடித்து சமைத்த உணவுகள் அனைத்தையும் கிராமத்தினர் அப்புறப்படுத்தினர் தொடர்ந்து ஊராட்சி துறை அதிகாரிகளும் போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொதுமக்கள் குடிநீருக்காக பயன்படுத்தும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  தொடர்ந்து அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அந்த மேல்நிலை நீர் திறக்க தொட்டியை தூய்மைப்படுத்தும் பணியிலும் ஊராட்சிமன்ற ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்

இதையும் படிங்க: சிறுவர்களை வளைத்து வளைத்து கடித்த தெருநாய்கள்... மக்கள் அச்சம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share