மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கு... ஒரே போடாய் போட்ட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை...!
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பூஜை செய்வதற்காக தொடங்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான, ரூ.60 கோடி மதிப்புள்ள 1.73 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தற்போது தள்ளுபடி செய்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவிலுக்கு சேவை செய்வதற்காக புதுக்கோட்டை ராஜ்குமார், தட்சிணாமூர்த்தி, துரைராஜா, துரைராணி அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்து, பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமித்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் முன்னாள் தாசில்தார் அன்பழகன், தற்போது துணை மாவட்ட ஆட்சியராக உள்ளவர், முன்னாள் விஏஓ அரசன், புதுக்கோட்டை மாவட்டம் சிலாவிடுதி பகுதியைச் சேர்ந்த ராமாயி ஐயர், தஞ்சாவூர் மாவட்டம் சிலாத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தமிழ்செல்வி, திருவள்ளூர் மாவட்டம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த அனிஷ் பிரகாஷ் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சோழவந்தானில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சி... மரண பயத்தில் மதுரை மக்கள்... சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு...!
கோவில் இணை ஆணையர் செல்லத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில், தங்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அனிஷ் பிரகாஷ் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர். விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் சில அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால், உண்மையை வெளிக்கொண்டு வர விரிவான விசாரணை நடத்துவது அவசியம் என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், கடந்த ஜூலை 25ஆம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது விசாரணை ஆரம்பக்கட்டத்திலேயே உள்ளது. எனவே, இந்த விசாரணையில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என்று நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஆர். விஜயகுமார் உத்தரவிட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கை ரத்து செய்யக் கோரி, இந்த வழக்கில் தொடர்புடைய அனிஷ் பிரகாஷ் உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவிலுக்கு சேவை செய்வதற்காக வழங்கப்பட்ட ரூ.60 கோடி மதிப்புள்ள 1.73 ஏக்கர் நிலம் முறைகேடாக பட்டா மாற்றம் செய்யப்பட்டு, பத்திரப்பதிவு செய்து ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் 19 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
விசாரணை தற்போது ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாலும், இதில் அரசு அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டிருப்பதாலும், உண்மையை வெளிக்கொண்டு வர விசாரணை அவசியம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வழக்கு விசாரணையில் தற்போது தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்த நீதிபதி, வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதல் நாளே இப்படியா?... வெற்றி பயணத் திட்டத்தை காற்றில் பறக்கவிட்ட நடத்துநர்... டிக்கெட் எடுக்கச் சொல்லி பெண் பயணியிடம் தகராறு...!