×
 
☰

ஸ்தம்பித்தது மதுரை... நெல்லையிலும் சிக்கல்... தவெக அரசுக்கு எதிராக தூய்மை பணியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு...!

சோழவந்தான் பேரூராட்சி முன்பு காலவரற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தூய்மை பணியில் தனியார்மயத்தைக் கைவிட வேண்டும், அரசாணை 152 மற்றும் 139யை ரத்து செய்ய வேண்டும், அவர்லேண்ட் ஒப்பந்த நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும், மதுரை மாநகராட்சியில் பணிபுரியும் தினக்கூலி / தொகுப்பூதியம்/ஓப்பந்த தூய்மை பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரம் செய்திட வேண்டும் , வாரிசு வேலை வழங்கிட வேண்டும் சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் தீபாவளி பண்டிகை போனசாக 8.33 சதமானம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சி தொழிலாளர் சங்கம், தமிழ் நாடு ககாதார பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் , தொழிலாளர் முன்னேற்ற சங்கம் இணைந்து  தூய்மை பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


இன்று காலை மதுரை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. 

சோழவந்தானில் காத்திருப்பு போராட்டம்: 

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி இன்று காலை முதல் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: விஜய் ஆட்சியிலும் விடிவில்லையா?... கொதித்தெழுந்த தூய்மை பணியாளர்கள்... தனியார் நிறுவனத்தால் நடக்கும் கொடுமை...!

​தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், சோழவந்தான் பேரூராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் மேம்பாட்டு சங்கச் செயலாளர் மருதுபாண்டியன் தலைமையில் இந்தப் போராட்டம் தொடங்கி உள்ளது.

​விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலான இச்சங்கத்தின் கீழ், நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் தங்களுடைய பணிகளைப் புறக்கணித்துவிட்டு, பேரூராட்சி வாயிலில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

​பணி நிரந்தரம் மற்றும் முறையான சம்பள உயர்வு உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

​சோழவந்தான் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வசிக்கும் இப்பகுதியில் தூய்மைப் பணியாளர்களின் இந்தப் போராட்டத்தால் நகரின் பல இடங்களில் துப்புரவுப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

நெல்லையிலும் போராட்டம்:

தமிழகத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலி தொழிலாளர்களாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தர படுத்த வேண்டும். அரசாணைப்படி தினசரி சம்பளம் ரூபாய் 762 வழங்க வேண்டும். காலை உணவு திட்டத்தில் தரமான உணவு வழங்காத காரணத்தினாலும், காலை உணவு திட்டத்தை பயன்படுத்தி ஒப்பந்ததாரர்கள் கொள்ளை அடிக்க சந்தர்ப்பத்தை உருவாக்கியதை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

​

இதையும் படிங்க: தூய்மை பணியாளர்கள் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.? உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் விளக்கம்.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share