×
 

கோயில் நகரம் இனி தொழில் நகரம்! இந்தியாவின் வரலாற்றை தமிழ்நாட்டிலிருந்து துவங்குங்கள்! ஸ்டாலின் பளீச்!

மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வளர்கிறது என்ற தலைப்பில் நடைபெற்ற மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

மதுரை: “மதுரை என்றாலே மீனாட்சி, அழகர் கோயில், ஜல்லிக்கட்டு என்று தான் உலகம் பார்த்தது. இனி மதுரை என்றாலே தொழில், முதலீடு, வேலைவாய்ப்பு என்றும் பேசப்படும்!” என்று இன்று மதுரையில் நடந்த “தமிழ்நாடு வளர்ச்சி” முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். அவரது ஒவ்வொரு வார்த்தையும் மதுரை மக்களின் மார்பில் பெருமிதத்தையும், இளைஞர்களின் மனதில் நம்பிக்கையையும் நிரப்பியது.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என்ற அவசரத்தை உணர்ந்தோம். அதனால் உலகம் முழுவதும் நான் நேரில் சென்று முதலீட்டாளர்களைச் சந்தித்தேன். முதலீட்டாளர்களின் முகவரி தமிழ்நாடு என்ற நிலையை உருவாக்கினோம். இன்று 80 சதவீத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நிறைவேறி தொழிற்சாலைகளாக மாறியிருக்கின்றன. முதலமைச்சர் கேட்டார் என்று யாரும் முதலீடு செய்ய மாட்டார்கள்; தமிழகத்தில் உள்ள சூழலைப் பார்த்துத்தான் முடிவு செய்கிறார்கள்” என்று ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார்.

மதுரையைப் பற்றி பேசும்போது அவர் உணர்ச்சி பொங்க, “மதுரை தூங்கா நகரம் என்று சொல்லக்கூடாது! மதுரையை எப்போதும் விழிப்புடன் இருக்கும் மண் என்றுதான் சொல்ல வேண்டும். கோயில் நகரமான மதுரை தொழில் நகரமாகவும் புகழ்பெற வேண்டும் என்பதே எனது ஆசை. இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தொடங்கி எழுதப்பட வேண்டும்” என்றார். 

இதையும் படிங்க: தமிழ்நாடு வளர்ச்சி! முதலீட்டாளர் மாநாடு! ரூ.36,660 கோடி முதலீட்டில் 56,766 பேருக்கு வேலை! 91 ஒப்பந்தம் கையெழுத்து!

“தொழில் முதலீட்டிற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் மதுரையில் இருக்கின்றன. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க நாங்கள் தொடர்ந்து உழைக்கிறோம். விருதுநகரில் உருவாகும் ஜவுளி பூங்காவால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும். தென்தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப மையமாக மதுரை மாறி வருகிறது. இனி மதுரை இளைஞர்கள் சென்னை, பெங்களூரு செல்ல வேண்டிய அவசியமில்லை; வேலை இங்கேயே வரும்!” என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து, “தொழில் முதலீட்டிற்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளும் மதுரையில் உள்ளன. தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை பெருக்க தொடர்ந்து முயற்சி செய்கிறோம். விருதுநகரில் உருவாகும் ஜவுளி பூங்காவால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கும். தென்தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப மையமாக மதுரை மாறி வருகிறது” என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: மதுரைக்கு புத்தம் புது இறக்கை!! வீரமங்கை வேலுநாச்சியார் மேம்பாலத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share