×
 

கொஞ்சம் விஷம் வாங்கி கொடுத்திருக்கலாமே! உங்க பையனுக்காக நான் துரோகியா? மனம் உடைந்த மல்லை சத்யா..!

உங்கள் மகனுக்காக என்னை துரோகியாக சித்தரித்து விட்டீர்கள் என்று மல்லை சத்யா வேதனை தெரிவித்துள்ளார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்து இயங்க வேண்டும் என்ற உணர்வுடன் இந்த நாள் வரை இருந்து வந்ததாகவும் ஆனால் கடகத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைக்கு நிச்சயமாக தான் காரணம் இல்லை என்றும் கூறினார். வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு புலி படை வீரன் மாத்தையா துரோகம் செய்ததைப் போன்று வைகோவிற்கு தான் துரோகம் செய்து விட்டதாக அவர் பேசியிருப்பதாகவும் சான்றோர் பெருமக்களே நான் என்ன மாத்தையா போன்ற துரோகியா என்றும் நீதி கூறுங்கள் எனவும் கேட்டுள்ளார். 

தனது அரசியல் பொது வாழ்க்கையில் வைகோ எம்பி க்கு எதிராக ஒரு நாள் கூட சிந்தித்தது இல்லை என்றும் உண்மையாக செயல்பட்டதாகவும், ஆனால் வைகோவின் மகன் துரை எம்பி அரசியலுக்காக, 32 ஆண்டுகள் வெளிப்படை தன்மையோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் குடும்பத்தை மறந்து என் வாழ்க்கையில் 32 ஆண்டுகளாக வசந்தத்தை தொலைத்து இரவு பகல் பாராமல் கட்சி... கட்சி., தலைவர் வைகோ என்று பணியாற்றி வந்த தன்மீது அபாண்டமாக துரோகப் பழி சுமத்தப்பட்டதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

தனது அரசியல் பொது வாழ்க்கையை வீழ்த்துவதற்கு மாமனிதர் தலைவரும் வைகோ வேற ஏதாவது ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கலாம் அல்லது ஒரு பாட்டில் விஷம் வாங்கி கொடுத்து குடிக்க சொல்லி இருந்தால் குடித்து செத்துப் போய் இருப்பேன் ஆனால் உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லால் தங்களது கிடைத்தது என்றும் தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார். மரம் ஓய்வு எடுக்க விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை என்ற சீனத்தின் தலைவர் மாவோ அவர்களின் பொன்முடிக்கு இலக்கணமாக கடந்த நான்கு நாட்களாக தான் எதுவும் பேசாமல் மௌனம் காத்து வந்ததாகவும் காரணம் மதிமுக துணை பொதுச்செயலாளராக இப்போது வரையில் கடமை கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டை காத்து வந்த நிலையில் தன் மீது அதிமுக முதன்மை செயலாளர் துரை எம் பி பொதுவெளியில் விமர்சித்து பேசியதால் தான் பதில் சொல்ல வேண்டிய ஜனநாயக கடமை உண்டு என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: மதிமுகவில் வெடித்தது பிரளயம்... துரோகி பட்டம் கட்டி அனுப்ப பாக்குறாரு... வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

இதையும் படிங்க: மதிமுகவில் வெடித்தது பிரளயம்... துரோகி பட்டம் கட்டி அனுப்ப பாக்குறாரு... வைகோ மீது மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share