×
 

#BREAKING போலீஸ் தாக்கியதால் விசாரணை கைதி மரணமா?... விடிந்ததுமே புதிய திருப்பம்...டிஜிபி அதிரடி உத்தரவு...!

சிவகங்கை மானா மதுரையில் விசாரணை கைதி ஆகாஷ் மரண வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. 

மானாமதுரையில் கடந்த 6ம் தேதி அதிகாலையில் ஜெயபாண்டி, அழகர் ஆகிய இருவரையும் டூ வீலரில் வந்த இரண்டு பேர் கொண்ட கும்பல் வாளால் வெட்டி விட்டு தப்பியது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில்  திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையிலான போலீசார் மானாமதுரை கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் (26), குணா  ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதில் ஆகாசை கைது செய்த  போது 4 வழிச்சாலை மேலப்பசலை பாலத்த்தில் இருந்து குதித்ததாகவும், கால் முறிந்ததாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்  சிகிச்சையில் இருந்த ஆகாஷ் நள்ளிரவில் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார் என போலீசார் தரப்பில் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்ற நிலையில் மானாமதுரையில் அவரது உறவினர்கள் மதுரை - பரமக்குடி 4 வழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ஆகாஷை தாக்கிய இன்ஸ்பெக்டர் திலீபன் உள்ளிட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் வலியுறுத்தி 12 மணி நேரத்திற்கும் மேலாக மறியலில் ஈடுபட்டு வந்தனர். காவல்துறை அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தி தோல்வி அடைந்த நிலையில், இன்று காலையும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. 

கைதி உயிரிழந்த சம்பவத்திலிருந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ், கிருஷ்ணசாமி, செல்வப்பெருந்தகை உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்தனர். தற்போது வரை இந்த போராட்டக்களமானது நீடித்து வரும் நிலையில், அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது காவல்துறை தலைமை இயக்குனர் ஆணையின்படி குற்றப்பதிவு புலநாய்வு துறைக்கு உரிய விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: சிவகங்கையில் அடுத்த ரத்த களரி... சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது அரிவாள் வெட்டு... மர்ம கும்பல் மீண்டும் வெறியாட்டம்...!

மறியலில் ஈடுபட்ட ஆகாஷ் உறவினர்களிடம் கோட்டாசியர் ஜெபி கிரேசியா, ஏடிஎஸ்பி பிரான்சிஸ் பாண்டியன், டிஎஸ்பி கண்ணன், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆகாசை விரட்டி பிடித்த திருப்புவனம் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்ஐ குகன் உள்ளிட்ட 16 போலீசார் மீது கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: “முட்டாள் தனம்”... வார்த்தையை விட்ட பிரபல நடிகர்... பொறுமையிழந்து த்ரிஷா கொடுத்த பதிலடி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share