×
 

“முட்டாள் தனம்”... வார்த்தையை விட்ட பிரபல நடிகர்... பொறுமையிழந்து த்ரிஷா கொடுத்த பதிலடி...!

இந்த குந்தவையை வெளியே விடாமல் வீட்டுக்கு உள்ளேயே கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது.

விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு உள்ளது என்று கூறி சங்கீதா சொர்ணலிங்கம் விவாகரத்து கேட்ட நிலையில், விஜயும், த்ரிஷாவும் திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றாக பங்கேற்றனர். தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய் மற்றும் நடிகை த்ரிஷா கிருஷ்ணன் கலந்து கொண்டனர். இருவரும் ஒரே காரில் வந்து சேர்ந்தே மண்டபத்திற்குள் சென்ற வீடியோ வெளியாகி வைரலானது. மேலும் இருவரும் ஒரே நிறத்தில் உடையணிந்திருந்ததும் சர்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் தொகுப்பாளர்கள் திரையில் சில புகைப்படங்களைப் போட்டுக் காட்டி அதுகுறித்து கருத்து தெரிவிக்கச் சொல்லி கேட்டனர். அதில் த்ரிஷாவின் புகைப்படமும் இடம் பெற்றது.

அதற்கு பார்த்திபன் “இந்த குந்தவையை வெளியே விடாமல் வீட்டுக்கு உள்ளேயே கொஞ்ச நேரம் குந்த வைப்பது நல்லது. அது நிறைய பிரச்சினைகளை உண்டாக்காமல் இருப்பதற்காக சொல்கிறேன். சில கவிதைகளை ரசிக்கலாமே தவிர அந்த கவிதையை சொல்லாமல் இருப்பது சிறந்தது” என்று பேசியிருந்தார்.

இதையும் படிங்க: வருந்துகிறேன்..! த்ரிஷா குறித்து அவதூறு பேச்சு..! வருத்தம் தெரிவித்த நயினார்..!

அதற்கு பதிலளிக்கும் விதமாக த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதன் ஏற்பாட்டாளர்கள் நடிகர் ஒருவர் தனது உதவியாளர் மூலம் கேட்டுக்கொண்டதன் மூலமாக எனது பெயரும், எனது புகைப்படமும் கடைசி நேரத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டதாக எனக்கு தெரியவந்தது. ஒரு மைக்ரோபோன் ஒருவரது கருத்தை புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையாகவும் மாற்றக்கூடியது. அது முட்டாள் தனத்தை சற்று அதிகமாகவே கேட்கச் செய்யும், அறிவில்லாமல் கூறப்படும் அசிங்கமான வார்த்தைகள் அதனை பேசும் நபரைப் பற்றியே குறிப்பிடுகின்றன” என பதிவிட்டுள்ளார். பார்த்திபனுக்கு எதிரான த்ரிஷாவின் இந்த கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: அருவருப்பான பேச்சு..! திரிஷாவை விஜய்யுடன் தொடர்பு படுத்தி கருத்து... நயினாருக்கு கண்டனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share