×
 

விஜய் பிரதமரா? இன்னும் ரசிகர் மன்ற Mode-ல்தான் இருக்கிறார்கள்! தவெக அமைச்சர்களை கிண்டல் செய்த மாணிக்கம் தாகூர்

தமிழகத்திற்கு எதிரான மேகதாது திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், தமிழக காங்கிரஸ் இருக்கும் வரை அங்கு ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

தமிழக அரசியல் களத்தில் நீட், மேகதாது விவகாரங்களுடன் தவெக தலைவர் விஜய் குறித்தும் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்த கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோதுதான் தமிழகத்தில் நீட் தேர்வு அமலுக்கு வந்ததாக விமர்சித்தார். அப்போது நீட் வேண்டாம் என்று மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்றும், தற்போது மட்டும் காங்கிரஸ் மீது பழியை சுமத்துவது சரியல்ல என்றும் அவர் கூறினார்.

ராகுல் காந்தி பிரதமராகும் சூழல் ஏற்பட்டால், தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறாது என்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். ராகுல் காந்தி பிரதமராக பதவியேற்றவுடன் போடும் முதல் கையெழுத்துகளில் தமிழகத்தில் நீட் தேர்வை நிறுத்தும் நடவடிக்கையும் இடம்பெறும் என அவர் கூறினார்.

இதையும் படிங்க: “பாஜகவின் பொம்மலாட்ட பொம்மை...” - அன்புமணி ராமதாஸை சீண்டிய மாணிக்கம் தாகூர்...!

இதற்கிடையே, விஜய்யை எதிர்கால பிரதமராக தவெக நிர்வாகிகள் சிலர் கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த மாணிக்கம் தாகூர், தவெகவினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருப்பதாக விமர்சித்தார். டெல்லி சென்றாலும் விஜய் குறித்துதான் பேசுவதாகவும், கட்சியினர் அரசியல் சூழலை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.

மேகதாது அணை விவகாரத்திலும் காங்கிரசின் நிலைப்பாடு தெளிவானது என மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். தமிழகத்திற்கு எதிரான மேகதாது திட்டத்தை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், தமிழக காங்கிரஸ் இருக்கும் வரை அங்கு ஒரு செங்கல் கூட வைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

மேகதாது திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காவிட்டால் அணையை கட்ட முடியாது என குறிப்பிட்ட அவர், திட்டத்திற்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மத்திய அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவித்தார். கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் கூறும் கருத்துகளை நம்பக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

தவெக ஆட்சியை பாராட்டி, விஜய்யை வருங்கால பிரதமர் என அக்கட்சியின் அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசியது குறித்தும் மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்தார். காங்கிரஸ் ஆதரவால்தான் விஜய் முதலமைச்சராக இருப்பதாக அவர் கூறியதுடன், தவெக நிர்வாகிகள் இன்னும் ரசிகர் மன்ற ‘Mode’-ல் இருந்து அரசியல் ‘Mode’-க்கு மாறவில்லை என்றும் காட்டமாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: “தென் மாநிலங்களுக்கு துரோகம்!” தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக–காங்கிரஸ் மோதல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share