×
 

மாரிதாசை விடுதலை செய்... இதுக்கு பேரு பாசிசம் இல்லையா? கொந்தளித்த அதிமுக...!

யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

கரூர் சம்பவம் குறித்து அவதூறு பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரித்து இருந்தார். இந்த நிலையில் யூடியூபர் மாரிதாஸ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம் என்பதே ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியின் போக்காக இருந்து வருகிறது என குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் கருத்துகளுக்கு கைது தான் பதில் என்றால், இதற்கு பெயர் பாசிசம் அல்லாமல் வேறு என்ன என்று கேள்வி எழுப்பிய அதிமுக, இன்று மாலை 6 மணிக்கு, கரூர் சம்பவம் தொடர்பாக திமுக நடத்திய நாடகம் ஒன்றைக் காணொளியாகப் பதிவிடுவதாக மாரிதாஸ் கூறி இருந்ததை சுட்டிக்காட்டியது. அவர் எதையேனும் உண்மையை சொல்லிவிடப் போகிறார் என்று பயந்து தான் அவசர அவசரமாக கைது செய்துள்ளதா ஸ்டாலின் அரசு என்றும் அப்படி என்ன உண்மையைக் கண்டு இவ்வளவு அஞ்சுகிறது இந்த அரசு என கேள்வி எழுப்பி உள்ளது.

கிட்னி திருட்டில் தொடர்புள்ள உங்கள் கட்சி MLA, தனது ரோல்ஸ் ராய்ஸ் காருடன் கிட்னி திருட்டை ஒப்பிட்டு நக்கலாக பேசும் அளவிற்கு ஆளுங்கட்சி சார்ந்தோர் குற்றங்கள் மீது கொஞ்சம் கூட நடவடிக்கை எடுக்கமால், காப்பாற்றும் முயற்சிகளில் தான் ஈடுபடுகிறது திமுக அரசு என்று சாடியது. ஏனெனில், கிட்னி திருட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் அமைத்த SIT-க்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது என்று கூறியது.

இதையும் படிங்க: கரூர் சம்பவம் எதிரொலி… இபிஎஸ் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு! முக்கிய காரணம் தெரியுமா?

ஆனால், அரசுக்கு எதிராக ஒரு வார்த்தை உதிர்த்தாலே முழுவீச்சில் கைது நடவடிக்கையில் ஈடுபடுவது ஏன் என்றும் உடனடியாக மாரிதாசை விடுதலை செய்வதுடன், ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்துரிமையின் குரல்வளையை நெறிக்கும் பாசிசப் போக்கை கைவிடுமாறு வலியுறுத்தி உள்ளது.

இதையும் படிங்க: WAIT & SEE... அமைதி வெற்றிக்கான அறிகுறி... சூசகமாக பேசிய செங்கோட்டையன்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share