×
 

கஜானா காலியா.? புதிய அறிவிப்புகளும், குற்றச்சாட்டுகளும்..!! பகீர் கிளப்பிய அமைச்சர் மரியவில்சன்..!

தமிழக அரசின் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் மீதான உரையை நிதி அமைச்சர் மரிய வில்சன் நிகழ்த்தினார். பத்திரப்பதிவுத்துறைக்கு 475 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓய்வூதிய நன்மைகளுக்காக 47,240 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நீதி நிர்வாகத் துறைக்காக 2486 கோடி ரூபாயும், சுற்றுலாத்துறைக்கு 775 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியை உலகறியச் செய்யும் வகையில் Tamil language model உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அரசின் அதிகாரப்பூர்வ தொடர்புகளில் ஏழை மொழி தொழில்நுட்பம் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து தமிழுக்கான ஏயை மாதிரி உருவாக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இயற்கை வளத்துறைக்கு 438 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் 3000 திருக்கோவில்களுக்கு திருப்பணி மற்றும் திருக்குடமுழுக்கு நடத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

உணவுத் துறைக்கு 14 ஆயிரத்து 830 கோடி ரூபாயும் வருவாய்த்துறைக்கு 11 ஆயிரத்து 532 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான 213 திருக்கோயில்கள் புனரமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. வீட்டு வசதி துறைக்கு 8,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது என்றும் நிதி ஆதாரங்களை பெருக்காவிடில் நலத்திட்டங்களை தொடர முடியாத நிலை ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வீடு, நதி, மின்சாரம்... பட்ஜெட்டில் விஜய் அரசின் Triple Attack..! சட்டசபையை கலக்கிய அதிரடி அறிவிப்புகள்..!!

தொழில்துறைக்கு 4414 கோடி ரூபாயும், மருத்துவத்துறைக்கு 23 ஆயிரத்து 357 கோடி ரூபாயும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இந்து சமய அறநிலையத்துறைக்கு 708 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாய் இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 575 கோடி ரூபாயாக உள்ளது என்று தெரிவித்தார். தமிழ்நாட்டின் நிதிநிலைமையை சீரமைக்க குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் நிதிநிலை மற்றும் நிதி இல்லாமல் உள்ளதாகவும் பட்ஜெட் உரையில் அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: விஜய் அரசின் முதல் பட்ஜெட்டில் Game Changer திட்டங்கள்... கர்ப்பிணிகளுக்கு குட் நியூஸ்..! ஸ்மார்ட் மூவ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share