“தலை, கை, கழுத்தில் காயம்...” பழங்குடி லாக்அப் மரணம் குறித்து மனைவி பகீர் பேட்டி...!
தலை, கை உள்ளிட்ட இடங்களில் காயங்கள் உள்ளது. எனவும் நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என மனைவி மகள்கள் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் மீதும் மேலும் 5 பேர் மீதும் கடந்த 2022ம் ஆண்டு கஞ்சா செடி வளர்த்ததாக வனத்துறையினரால் வழக்கு தொடரப்பட்டது. இதில் முன் ஜாமின் பெற்ற மாரிமுத்து வனத்துறை விசாரணைக்கு ஆஜராகாமல் நேரடியாக வழக்கு விசாரணைக்கு மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகி வந்துள்ளார். இதில் மற்ற 5 பேரும் வனத்துறை விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
இதனால் மாரிமுத்து மீது வனத்துறை அதிகாரிகள் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் வனத்துறை அதிகாரிகள் தொல்லை தாங்க முடியாமல் கேரளா மூணார் அடுத்த சூரியநெல்லி செட்டில்மென்ட் பகுதிக்கு சென்று அங்கு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 29 ம் தேதி வழக்கு விசாரணை முடிவடைந்து கஞ்சா செடி வளர்த்த வழக்கில் இருந்து 6 பேரையும் விடுவித்துள்ளது.
இதில் கையெழுத்திட 30ம் தேதி உடுமலைக்கு மாரிமுத்து வந்துள்ளார். அங்கு வழக்கறிஞரை சந்தித்து விட்டு சென்ற நிலையில் இவர் சிறுத்தை பல் வைத்திருந்ததாக கேரளா வனத்துறையினர் கைது செய்து, தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்ததாகவும் அதன் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அடுத்த நாள் காலை கழிவறை செல்லும் போது மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: “ஒரு வாரம் டைம்...” - அஜித் மரண வழக்கில் அதிரடி திருப்பம் - சிபிஐ இயக்குநருக்கு பறந்த உத்தரவு
இது தொடர்பாக கஸ்டடி மரணம் பதிவு செய்யப்பட்டு உடுமலை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி நித்யகலா விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே,விசாரணைக் கைதியின் உடற்கூராய்வு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. உடலை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது தங்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் பிணவறை வாயில் முன்பாக அமர்ந்து தர்ணா மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உடற்கூறாய்வு சோதனை என்பது உள்ளே இருந்த மாரிமுத்துவின் மனைவி கூறுகையில், “தலை கை கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாகவும் தனது கணவரை கொலை செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார் மேலும் எஸ்.சி எஸ்.டி பிரிவில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதையும் படிங்க: அஜித் விவகாரத்தில் விஜய் எடுத்த அதிரடி முடிவு... தமிழக அரசுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்...!