×
 

சென்னை மெரினாவில் துயரம்.. மாயமான சிறுவன் 3 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்!

மெரினா கடற்கரையில அலையில் சிக்கி 16 வயது சிறுவனின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 23ம் தேதி மெரினா கடற்கரைக்கு பெற்றோரோடு சென்ற ஆவடியை சேர்ந்த கோயில் பதாகை கிராமத்தைச் சேர்ந்த சுதர்சன் 16 என்ற வயதான சிறுவன், மெரினா கடற்கரையில ராட்சச அலையில் சிக்கி மாயமானார். இதுகுறித்து பெற்றோர் அருகேயுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், காவல்துறைக்கு தகவல் கொடுக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கடந்த 3 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வந்த நிலையில், நேற்று இரவு துறைமுகம் அருகே இருக்கக்கூடிய பகுதியில் சிறுவனின் உடல் ஒதுங்கி இருக்கிறது.

சிறுவனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

நடந்தது என்ன?

சென்னை ஆவடியை அடுத்த கோவில்பதாகை பகுதியை சேர்ந்த கணேசன், தேவகி தம்பதியருக்கு சுதர்சன், கமலேஷ் ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்களில், சுதர்சன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார். கோடை விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக் கிழமை மாலை தேவகி தனது மகன் சுதர்சன் மற்றும் கமலேஷ் ஆகியோருடன் பொழுதை கழிப்பதற்காக மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். அப்போது மெரினாவில் கண்ணகி சிலைக்கு பின்புறம் உள்ள கடல் பகுதியில் சுதர்சனும், அவரது தம்பி கமலேஷும் கடலில் குளித்து, பொழுதைக் கழித்து கொண்டிருந்தனர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ரத்தக்களறி... 17 வயது சிறுவன் கொடூரமாக வெட்டிக்கொலை... முதல் மாடியில் இருந்து தூக்கிவீசப்பட்ட பயங்கரம்...!

அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் தம்பி கமலேஷ் சிக்கியுள்ளார். இதனை கண்ட சுதர்சன், உடனடியாக தம்பியை ராட்சத அலையிலிருந்து காப்பாற்ற நினைத்து, அவர் அருகே சென்று கமலேஷின் கையை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார். ஆனால் அதே நேரம் எதிர்பாராத விதமாக மற்றொரு ராட்சத அலையில், சுதர்சன் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதையடுத்து அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற நினைத்தும் சுதர்சன் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடியும் சுதர்சனை கண்டுபிடிக்க முடியாததால், மெரினா போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாயமான சிறுவனை தீவிரமாக தேடி வருகின்றனர். இன்று காலை வரை சிறுவன் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இதனிடையே, தனது மகனை காப்பாற்றி தரும்படி சிறுவனின் தாய் கண்ணீர் மல்க முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. 

இதையும் படிங்க: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு... சென்னையில் ஒரு லிட்டர் விலை இவ்வளவா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share